Published : 17 Sep 2019 10:28 AM
Last Updated : 17 Sep 2019 10:28 AM

இருமொழிக் கொள்கையில் தமிழகம் பின்வாங்காது துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டம்

திருச்சி

இருமொழிக் கொள்கையில் இருந்து எந்த விதத்திலும் தமிழ்நாடு பின்வாங்காது என துணை முதல் வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித் தார்.

திருச்சி விமானநிலையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அண்ணா அறிவித்த இருமொழிக் கொள்கைதான், எங்களின் மொழிக் கொள்கை என ஜெயலலிதா சட்டப்பேரவை யிலேயே தெளிவாக, விளக்கமாக அறிவித்துவிட்டார்.

மேலும், இருமொழிக் கொள் கைதான் தமிழ்நாட்டின் உயிர்நாடி பிரச்சினை. எனவே, இதில் இருந்து எந்த விதத்திலும் தமிழ்நாடு பின் வாங்காது.

5, 8-ம் வகுப்புகளுக்கு ஏற்கெ னவே பொதுத்தேர்வு இருந்தது. அது நீக்கப்பட்டிருந்த நிலையில், மாணவர்களின் தேர்ச்சி விகிதம், படிப்புத் திறனை அதிகரிக்கும் நோக்கில் தற்போது மீண்டும் கொண்டு வரப்படுகிறது. முதல் வருக்கும், எனக்குமான உறவு சுமுகமாகப் போய்க் கொண்டுள் ளது. இதைப் பிரிக்க வேண்டுமென ஊடகத் துறையினர் முயற்சி செய் கிறீர்கள், அது நடக்காது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x