பேராசிரியை நிர்மலாதேவிக்கு தொடரும் அரசியல் மிரட்டல்கள்: வழக்கறிஞர் புகார்

பேராசிரியை நிர்மலாதேவிக்கு தொடரும் அரசியல் மிரட்டல்கள்: வழக்கறிஞர் புகார்

Published on

ஸ்ரீவில்லிபுத்தூர்

கல்லூரி மாணவிகளை தவறாக வழி நடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ள பேராசிரியை நிர்மலாதேவிக்கு அரசியல் மிரட் டல்கள் வருவதாக அவரது வழக் கறிஞர் தெரிவித்துள்ளார்.

கல்லூரி மாணவிகளை தவறாக வழி நடத்தியதாக அருப்புக் கோட்டையைச் சேர்ந்த பேராசிரியை நிர்மலாதேவி கடந்த ஆண்டு ஏப்ரலில் கைது செய்யப் பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்ததாக மதுரை காமராசர் பல் கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்ப சாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். தற்போது ஜாமீ னில் மூவரும் வெளி வந்துள்ளனர்.

இவ்வழக்கு, ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதனை யொட்டி, பேராசிரியை நிர்மலா தேவி, ஆய்வு மாணவர் கருப்ப சாமி ஆகியோர் மகளிர் நீதிமன்றத் தில் நீதிபதி பரிமளா முன்பு நேற்று ஆஜராகினர். அப்போது நீதிபதி, நிர்மலாதேவி, கருப்பசாமி ஆகியோரை செப்.27ம் தேதி ஆஜராக உத்தரவிட்டார்.

வழக்கமாக நீதிமன்றத்தில் காரில் வரும் நிர்மலாதேவி நேற்று இருசக்கர வாகனத்தில் தலைக் கவசம் அணிந்து வந்திருந்தார். ஆனால், உதவிப் பேராசிரியர் முருகன் ஆஜராகவில்லை.

பின்னர், செய்தியாளர்களிடம் நிர்மலாதேவி வழக்கறிஞர் பசும் பொன் பாண்டியன் கூறியதாவது: தற்போதைய ஆளுநர், தமிழகத் தில் இருக்கும் வரை இந்த வழக் கின் விசாரணை முடியாது. ஜாமீ னில் வெளியே இருக்கும் நிர்மலா தேவிக்கும், அவரது குடும்பத்தின ருக்கும் அரசியல் மிரட்டல்கள் வருகின்றன.

சிறையில் அனுபவித்த கொடுமை, தனிமை காரணமாக மனநலம் பாதிக்கப்பட்டிருந்த நிர் மலாதேவி, தற்போது சிகிச்சைக்கு பிறகு நலமுடன் உள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவின் அடிப் படையில் 27-ல் எதிர் மனுதாக்கல் செய்ய வாய்ப்புள்ளது என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in