மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு: 16,000 கன அடியாக குறைப்பு

மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு: 16,000 கன அடியாக குறைப்பு
Updated on
1 min read

சேலம்: மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 18 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில், நேற்று மாலை முதல் 16 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஆகஸ்ட் 13-ம் தேதி முதல் டெல்டா பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கடந்த இரு நாட்களாக விநாடிக்கு 18 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டது. நேற்று முன்தினம் விநாடிக்கு 19 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை 17 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

இந்நிலையில், நேற்று மாலை 4 மணி முதல் நீர் திறப்பு விநாடிக்கு 16 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது. மேலும், கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 900 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. அணை நீர்மட்டம் நேற்று மாலை 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டிஎம்சி-யாகவும் இருந்தது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in