Published : 17 Sep 2019 09:57 AM
Last Updated : 17 Sep 2019 09:57 AM

குளங்களை தூர்வாரியதில் அரசியல் கட்சியினரின் நெருக்கடியால்; திருவாவடுதுறை ஆதீன கட்டளை சுவாமிநாத தம்பிரான் விலகல்: மடத்தை விட்டு வெள்ளை உடை தரித்து காசிக்கு பயணம்

கும்பகோணம்

திருவாவடுதுறை ஆதீன கட்டளை சுவாமிநாத தம்பிரான் சுவாமிகள் அப்பொறுப்பில் இருந்து நேற்று முன்தினம் இரவு விலகினார்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவாவடு துறை ஆதீனத்துக்குச் சொந்தமான திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயிலில் கட்டளை தம்பிரா னாக இருந்தவர் ஸ்ரீமத் சுவாமிநாத தம்பிரான் சுவாமிகள்(55). இவர் கடந்த ஓராண்டாக மகாலிங்க சுவாமி கோயிலுக்குச் சொந்தமான 10-க்கும் மேற்பட்ட குளங்களில் தூர்வாரும் பணியை மேற்கொண்டார்.

இந்நிலையில், ஸ்ரீமத் சுவாமிநாத தம்பிரான் சுவாமிகள் தனது உடல் நிலையை காரணம் காட்டி ஆதீன தம்பிரான் திருக்கூட்டத்தில் இருந்து விலகுவதாக ஆதீன தலைமை மடத்தில் நேற்று முன்தினம் இரவு கடிதம் அளித்தார். இதையடுத்து, திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகளின் உத்தரவுக்கு இணங்க ஆதீன மடத்தின் திருக்கூட்டத்து அடியவர் பொறுப்பில் இருந்து ஸ்ரீமத் சுவாமிநாத தம்பிரான் சுவாமி கள் விடுவிக்கப்பட்டார்.

இதையடுத்து, அவருக்கு கொடுக்கப்பட்ட மந்திர காஷாயம், வேடம் முதலியவற்றை ஆதீன தலைமை மடத்தில் நேற்று முன் தினம் இரவு ஒப்படைத்துவிட்டு, ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச் சாரிய சுவாமிகளிடம் ஆசிபெற்று அங்கிருந்து வெளியேறினார்.

இதுகுறித்து மடத்தின் நிர்வாகி களிடம் விசாரித்தபோது அவர்கள் கூறியதாவது: திருவாவடுதுறை ஆதீனத்தின் கட்டளை தம்பிரானாக ஈரோட்டைச் சேர்ந்த சுவாமிநாதன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தேர்வு செய்யப்பட்டார். இவர் ஆதீ னத்துக்குச் சொந்தமான இடங்கள், கோயில்கள் ஆகியவற்றை நிர் வகித்து வந்தார்.

ஆதீனத்துக்குச் சொந்தமாக திரு விடைமருதூர் பகுதிகளில் உள்ள 32 குளங்களில் 10 குளங்களை பல்வேறு ஆக்கிரமிப்புகளில் இருந்து மீட்ட ஸ்ரீமத் சுவாமிநாத தம்பிரான் சுவாமிகள், இக்குளங் களைத் தூர்வாரி குளத்தில் தண் ணீர் நிரப்புவதற்கான ஏற்பாடு களைச் செய்தார்.

இந்தக் குளங்களைத் தூர்வாரும் பணியை மேற்கொண்டபோது, அதற்கு ஆக்கிரமிப்பாளர்கள் பல எதிர்ப்புகளை காட்டினர். மேலும் ஒரு சில அரசியல் கட்சியினர் குளங் களைத் தூர்வாருவதற்கான ஒப் பந்தத்தையும், தூர்வாரப்படும் மண்ணையும் தங்களுக்குத் தர வேண்டும் என மிரட்டியுள்ளனர். ஆனால், ஸ்ரீமத் சுவாமிநாத தம்பி ரான் சுவாமிகளோ கோயில் நிர் வாகமே நேரடியாக தூர்வாரும் பணியை மேற்கொள்ளும் எனவும், தூர்வாருவதன் மூலம் கிடைக் கும் மண், கரையைப் பலப்படுத் தப் பயன்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார். இதுதொடர்பாக பிரச்சினை ஏற்பட்ட நிலையில், திருவிடைமருதூர் காவல் நிலையத் தில் ஸ்ரீமத் சுவாமிநாத தம்பிரான் சுவாமிகள் புகார் அளித்ததன்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், அரசியல் கட்சியினர் தொடர்ந்து ஸ்ரீமத் சுவாமிநாத தம்பிரான் சுவாமிகளுக்கு நெருக் கடி கொடுத்தனர். மேலும், குருமகா சன்னிதானத்திடம் புகாரும் அளித்தனர். இதையடுத்து குருமகா சன்னிதானம், ஆன்மிகப் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்துமாறும், குளம் தூர்வாரும் பணியை முன்னெடுக்க வேண்டாம் என ஸ்ரீமத் சுவாமிநாத தம்பிரான் சுவாமிகளிடம் கூறியுள்ளார்.

குளம் தூர்வாரியதில் அரசியல் கட்சியினரின் தலையீடு, மடத்தின் நிர்பந்தம் ஆகியவற்றின் காரண மாக மனமுடைந்த நிலையில் இருந்துவந்த ஸ்ரீமத் சுவாமிநாத தம்பிரான் சுவாமிகள் தனது பதவியை நேற்று முன்தினம் இரவு ராஜினாமா செய்துள்ளதாகக் தெரி கிறது. இதையடுத்து, நேற்று முன் தினம் இரவே வெள்ளை உடை தரித்து, காசிக்கு யாத்திரை செல்வதாகக் கூறிவிட்டு மடத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டார். இவ்வாறு மடத்தின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x