Published : 17 Sep 2019 08:43 AM
Last Updated : 17 Sep 2019 08:43 AM

அமெரிக்கா, துபாய் நாடுகளில் ரூ.8,835 கோடிக்கு ஒப்பந்தம்: நிறுவனம் வாரியாக பட்டியல் வெளியீடு - செயற்கை நுண்ணறிவு, பயோடீசல், எலெக்ட்ரிக் துறைகளில் முதலீடுகள்

சென்னை

அமெரிக்கா மற்றும் துபாய் நாடுகளில் செயற்கை நுண்ணறிவு, உணவு, தகவல் தொழில்நுட்பம், பயோடீசல் மற்றும் எலெக்ட்ரிக் ஆட்டோ தொழில் பிரிவுகளில் 41 நிறுவனங்களுடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதல்வர் பழனிசாமியின் வெளி நாடு பயணத்தின்போது 41 புரிந் துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.8,835 கோடிக்கான முதலீடு கள் பெறப்பட்டன. இதன்வாயி லாக 35,520 பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதில் அமெரிக்கா மற்றும் துபாய் நாடுகளில் எந்தெந்த நிறு வனங்களுடன் எவ்வளவு முதலீட் டுக்கான ஒப்பந்தங்கள் செய்யப் பட்டுள்ளன என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுளளது.

அதன்படி, அமெரிக்காவின் நியூயார்க்கில் நடந்த முதலீட்டாளர் கள் சந்திப்பின்போது, ஐடி துறை யில் ஜீன் மார்ட்டின் நிறுவனத்துடன் ரூ.80 கோடி, அக்யுல் சிஸ்டம்- ரூ.100 கோடி, மருந்து தயாரிப்பு துறையில் சிட்டஸ் பார்மா, நுரே, நோவிடியம் நிறுவனங்களுடன் தலா ரூ.75 கோடி, ஜோகோ ஹெல்த்- ரூ.15 கோடி என ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர, தானியங்கி தொழில் பிரிவில் எமர்சன் நிறுவனத்துடன் ரூ.130 கோடி, எரிசக்தித்துறையில் எஸ்டிஎல்என்ஜி நிறுவனத்துடன் ரூ.1050 கோடி, ஐடி துறையில் அஸ்பயர் கன்சல்டிங், ஜில்லியன் டெக்னாலஜி நிறுவனங்களுடன் தலா ரூ.70 கோடி, செயற்கை நுண்ணறிவு துறையில் லிங்கே டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் ரூ.1,000 கோடி, டிஜிட்டல் பிரான்ஸ் பார்மேசன் துறையில் பிசோ போர்ஸ் நிறுவனத்துடன் ரூ.40 கோடி என மொத்தம் ரூ.2,780 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட் டுள்ளது.

சான்பிரான்சிஸ்கோவில், தக வல் ஆளுமை, உணவு, செயற்கை நுண்ணறிவு, மருத்துவம், சுற்றுலா உள்ளிட்ட துறைகளில் ரூ.2,305 கோடிக்கு முதலீட்டுக்கான ஒப்பந் தம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், கபிசாப்ட் ரூ.36 கோடி, இசட்எல் டெக்னாலஜிஸ் ரூ.42 கோடி, ரைப் ரூ.21 கோடி, கால்டன் பயோடெக் ரூ.70 கோடி, லின் கோல்ன் எலெக்ட்ரிக் ரூ.16 கோடி, வேரபிள் மெம்ஸ் ரூ.1,500 கோடி, க்ளவ்டு லேர்ன் ரூ.7 கோடி, சியரா ஹெல்த் அலர்ட்ஸ் ரூ.50 கோடி, ஏசிஎஸ் குளோபல் டெக் - ரூ.100 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுதவிர, டாட்சால்வ்டு சிஸ் டம்ஸ் - ரூ.21 கோடி, இண்டி ஓட்டல்ஸ் ரூ.300 கோடி, லேட்டன்ட் ரூ.21 கோடி, அச்சரெயெம் ரூ.50 கோடி, நேச்சர் மில்ஸ் ரூ.36 கோடி, எஸ்ஏஐ ரூ.35 கோடி ஆகிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தொடர்ந்து, துபாயில் டிபி வேல்டு நிறுவனத்துடன் ரூ.1,000 கோடி, ஜெயன்ட் இன்டஸ்ட்ரீஸ் ரூ.2 ஆயிரம் கோடி, பிரைம் ஹெல்த் கேர் குழுமம் ரூ.500 கோடி, புரோ குளோபல் லாஜிஸ்டிக்ஸ் ரூ.150 கோடி, கே.எம்.சி. குரூப் ரூ.100 கோடி என மொத்தம் ரூ.3,750 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இதில், கே.எம்.சி. குரூப், மின்சார ஆட்டோ தயாரிப்பு நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x