Published : 17 Sep 2019 08:31 AM
Last Updated : 17 Sep 2019 08:31 AM

நாடு முழுவதும் வாகன விற்பனையில் நிலவும் மந்த நிலை: ரோபோக்கள் வரவும், சந்தை சக்தியை மீறிய உற்பத்தியுமே காரணம் - ஜிஎஸ்டி மற்றும் வட்டி குறைப்பு நடவடிக்கைகளால் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியுமா?

சென்னை

நாடு முழுவதும் வாகன விற் பனையில் நிலவும் மந்தநிலை பெரும் விவாதப் பொருளாக மாறி யுள்ளது. இந்நிலை நீடித்தால், லட் சக்கணக்கானோரின் வேலை வாய்ப்புகள் பறிபோகும் எனவும், உடனடியாக மந்தநிலையை சரி செய்ய ஜிஎஸ்டி, வங்கிக் கடன் வட்டி, பெட்ரோல் விலை ஆகிய வற்றில் மாற்றங்களை கொண்டுவர வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

வாகன உற்பத்தித்துறையின் சரிவை சீரமைப்பதாக கூறி மத்திய அரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. ஆனால் இத்துறையில் ரோபோக்கள் பயன் பாடு அதிகரிப்பு, மிதமிஞ்சிய வாகன உற்பத்தி குறித்து ஒரு வரும் பேசவில்லை. கடந்த 50 ஆண்டுகளில் தொழில்நுட்ப வளர்ச்சி, மின்னணு கருவிகள் பயன்பாடு காரணமாக பல்வேறு துறைகளில் உற்பத்தி அதிகரித் துள்ளது. அதே வேளையில் வேலைவாய்ப்பிழப்பும் ஏற்பட்டுள் ளது. ‘ஒவ்வொரு வினைக்கும், அதற்கு சமமான எதிர் வினை உண்டு’ என்பது நியூட்டனின் 3-வது விதி. இந்த விதி, வாகன உற்பத்தி துறை வீழ்ச்சிக்கு கனகச்சிதமாக பொருந்தும்.

தொழில்நுட்ப வளர்ச்சியை புகுத் தியதால், கடந்த 5 ஆண்டுகளில் அத்துறையில் ரோபோக்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. குறுகிய காலத்தில் அதிக உற் பத்தி இலக்கை நோக்கி, ரோபோக் கள் பயன்பாட்டை வாகன உற்பத்தி நிறுவனங்கள் அதிகரித்து வந்துள் ளன. சந்தைத் தேவைக்கும் அதிக மாக உற்பத்தி செய்ததன் விளை வாக, அவற்றை வாங்குவதற்கு ஆள் இன்றி வாகனங்கள் தேங்கிக் கிடக்கின்றன.

இதற்கிடையில் சில தினங் களுக்கு முன்பு, பஜாஜ் நிறுவன நிர்வாக இயக்குநர் ராஜீவ் பஜாஜ், வாகனத்துறையின் தற்போதைய சரிவுக்கு அதன் அதிக உற்பத்தி தான் காரணம். ஜிஎஸ்டி குறைப் பால் இந்த நெருக்கடி நிலையை சரி செய்ய முடியாது என கூறி யிருந்தார்.

இந்நிலையில், வருகிற 20-ம் தேதி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது. தேவைக்கு அதிக மான வாகனங்களை தயாரித்துக் கொண்டு ஜிஎஸ்டி வரியை குறைக்க சொல்வது எந்த விதத்திலும் நியாயம் இல்லை என இந்தியா சிமென்ட்ஸ் நிர்வாக இயக்குநர் என்.னிவாசன் கூறியுள்ளார்.

இந்திய வாகன உற்பத்தியாளர் சங்கம் வெளியிட்டுள்ள தகவலின் படி 2013 - 14 நிதியாண்டில் இந்தி யாவில் உற்பத்தியான மொத்த வாகனங்களின் எண்ணிக்கை 2 கோடியே 15 லட்சம். இது 2018-19 நிதியாண்டியில் 3 கோடியே 9 லட்ச மாக அதாவது 5 ஆண்டுகளில் 50 சதவீதம் உற்பத்தி அதிகரித் துள்ளது. இதில் இருசக்கர வாகன உற்பத்தி 1 கோடியே 68 லட்சத்தி லிருந்து 2 கோடியே 45 லட்சமாக வும், கார்கள் 30 லட்சத்திலிருந்து 40 லட்சமாகவும் உயர்ந்துள்ளன. ஆனால் அந்த அளவுக்கு வேலை வாய்ப்புகள் பெருகவில்லை.

இந்த பிரச்சினை தொடர்பாக சிஐடியு மாநிலச் செயலர் ஏ.முத்து குமார் கூறியதாவது:

இந்தியாவின் ஒட்டுமொத்த வாகன உற்பத்தியில் சுமார் 40 சதவீதம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெறுகிறது. அங்குள்ள வாகன தொழிற்சாலைகளில் தற் போது 10 சதவீதம் மட்டுமே நிரந் தரத் தொழிலாளர்கள். 90 சதவீதம் ரூ.10 ஆயிரம் வரை மாத சம்பளம் பெறும் ஒப்பந்தத் தொழிலாளர் கள். வாகன உற்பத்தியில் ரோபோக் களின் பயன்பாட்டை தவிர்க்க முடி யாது. நகர்ப்புறங்களில், ஏற்கெ னவே இருக்கும் சாலைகளில்தான் வாகனங்களை ஓட்ட வேண்டும். புதிய சாலைகளை உருவாக்க முடி யாது. ஆனால் ரோபோக்களைக் கொண்டு, தனக்கு திறன் இருக் கிறது என்பதற்காக சந்தை சக்தியை மீறி வாகனங்கள் உற்பத்தி செய்யப் பட்டதால், விற்பனை சரிந்துள்ளது. இதற்கு ஜிஎஸ்டி வரி மற்றும் கடன் வட்டி குறைப்பு தீர்வாகாது. சந்தை தேவைக்கு ஏற்ப உற்பத்தி, அனைத்து தொழிற்சாலைகளிலும் நிரந்தர பணியாளர்களை அதிக ரிக்கச் செய்து, வாங்கும் சக்தியை அதிகரிப்பது போன்றவற்றால் மட்டுமே, வாகன உற்பத்தி துறையை சரிவில் இருந்து மீட்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x