

தாம்பரம்
இந்தியாவின் மருத்துவ தலைநக ராக சென்னை திகழ்கிறது என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பெருமிதத்துடன் கூறி னார்.
வேலூர் விஐடி பல்கலைக்கழ கம் மற்றும் இந்திய பொருளா தார சங்கம் சார்பில் ‘தமிழக பொரு ளாதார வளர்ச்சி பின்னணியில் இந்திய பேரியல் பொருளாதாரம்’ என்ற தலைப்பிலான 3-வது தேசிய கருத்தரங்கம் சென்னை வண்டலூரை அடுத்த மேலக் கோடையூரில் உள்ள விஐடி பல் கலைக்கழக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கிவைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
உலக அளவில் விவசாயத்தில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்துள்ளோம். இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. பொருளாதார வளர்ச்சியில் உலகில் 5-வது இடத்தில் இந்தியா உள்ளது. மேக் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா, ஸ்மார்ட் சிட்டி, அனைவருக்கும் வீட்டுவசதி உள்ளிட்ட திட்டங்கள் மூலம் 2024-ல் பொருளாதார வளர்ச்சி 5 டிரில்லியன் டாலர் என்ற இலக்கை அடைய திட்டமிடப் பட்டுள்ளது.
மென்பொருள், தொலை தொடர்பு, சேவைத்துறை போன்ற துறைகளில் 65 சதவீதம் மில்லியன் டாலர் அந்நிய முதலீடு செய்யப்பட் டுள்ளது. இதில் மென்பொருள் துறையில் 180 மில்லியன் டாலர் வருவாய் வருகிறது. இதன் மூலம் 40 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். பொருளாதார வளர்ச்சிக்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும். சுற்றுச்சூழல் பாது காப்பு, வெளிப்படைத் தன்மை போன்றவை சிறந்து விளங்கினாலே வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிக் கும்.
ஆட்டோமொபைல், சுகாதாரம், ஜவுளி, கெமிக்கல், தோல்பொருள் உற்பத்தி போன்ற துறைகளில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது. அதிக தொழிற்சாலைகள் கொண்ட தமிழகத்தில், உள்கட்டமைப்பு வச திகள் சிறப்பாக அமைந்துள்ளன. வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் ஆண்டுக்கு 40 சதவீதம் பேர் சிகிச்சை பெறுவதற்காக தமிழகம் வருகின்றனர். இந்தியாவின் மருத் துவ தலைநகராக சென்னை திகழ் கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கருத்தரங்கில் பல் வேறு துறையில் சிறந்து விளங்கி யவர்களுக்கு விருதுகள் வழங் கப்பட்டன. உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், விஐடி துணைத் தலைவர் ஜி.வி.செல்வம், மனோன்மணீயம் சுந்தர னார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வி. சண்முகசுந்தரம் தமிழ்நாடு பொருளாதார சங்க செயலாளர் ஏ.ஆர்.வீரமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.