Published : 17 Sep 2019 07:52 AM
Last Updated : 17 Sep 2019 07:52 AM

பொதுமக்கள் தங்கவைக்கப்படும் புயல் பாதுகாப்பு மைய கட்டிடங்களை ஆய்வு செய்ய வேண்டும்: பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு 

சென்னை

வடகிழக்கு பருவமழை காலத் தில், பொதுமக்கள் தங்க வைக் கப்படும் புயல்பாதுகாப்பு மையங் கள் உள்ளிட்ட மையங்களில் தேவை யான அடிப்படை வசதிகள் இருப் பதை ஆய்வு செய்ய வேண்டும் என்று பொதுப்பணித்துறை அதி காரிகளுக்கு தலைமை பொறியாளர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் பொழியும். கடந்த சில ஆண்டுகளாக மழை போதிய அளவில் பெய்யவில்லை என்றாலும், 2015-ம் ஆண்டு வெள் ளம் மற்றும் 2016-ம் ஆண்டு வார்தா புயல் மற்றும் அடுத் தடுத்த ஆண்டுகளில் பாதிப்பை ஏற் படுத்திய ஒக்கி, கஜா உள்ளிட்ட புயல்களின் பாதிப்புகளை கருத் தில் கொண்டு பல்வேறு முன் னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.

இந்நிலையில், பொதுப்பணித் துறையின் கட்டிடப்பிரிவு தலைமை பொறியாளர் எம்.ராஜமோகன் அனைத்து மாவட்ட பொறியா ளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்ற றிக்கையில் கூறியிருப்பதாவது:

பொதுப்பணித்துறை பராமரிப் பில் இருக்கும் அனைத்து கட்டி டங்களையும் முழுமையாக சோதித்து, தேவையான நடவடிக் கைகளை எடுப்பது தொடர்பான அறிக்கைகளை செப்டம்பர் மாதத் துக்குள் அனுப்ப வேண்டும். அனைத்து அரசு கட்டிடங்களிலும் பாதாளச் சாக்கடை, கழிவுநீர் அமைப்புகளை ஆய்வு செய்து, அடைப்புகளை போர்க்கால அடிப் படையில் சரிசெய்ய வேண் டும். அதேபோல் மின் இணைப்பு களையும் ஆய்வு செய்ய வேண்டும். மிகவும் பாதிக்கப்பட்டுள்ள இணைப்புகளை கண்டறிந்து சீரமைக்க வேண்டும். தேவையான மாற்று மின்சக்தி அமைப்புகளை (பவர் பேக்அப்) தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

மழைநீர் தேங்கும் பகுதிகளை கண்டறிந்து அவ்வப்போது அந்த இடங்களை கண்காணித்து, அங் குள்ள கட்டிடங்களை சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கட்டிடத்தின் மேல் தளத்தில் கசிவு இருந்தால் உடனடியாக சீரமைக்க வேண்டும். மழைநீருக்காக அமைக்கப்பட்ட குழாய்களில் நீர் எளிதாக செல் லும் வகையில் அவற்றை சீர மைக்க வேண்டும். அனைத்து கட்டி டங்களும் சுத்தமும், சுகாதார முமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

வருவாய்த்துறையால் பராமரிக் கப்படும், புயல் பாதுகாப்பு மையங் கள் உள்ளிட்ட பொதுமக்கள் தங்குமிடங்களை ஆய்வு செய்து அவை தகுந்த நிலையில் உள்ளதா என்பதையும், போதுமான கழிப் பிடம், குடிநீர், மின்சார வசதி கள் உள்ளதா என்பதையும் காண்காணிக்க வேண்டும்.

இவ்வாறு தலைமை பொறி யாளர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x