மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்பு: அதிகாரிகளைக் கண்டித்து பொதுமக்கள் மறியல்

உயிரிழந்த மாணவன் தீனா.
உயிரிழந்த மாணவன் தீனா.
Updated on
1 min read

சென்னை

போரூரில் சாலையில் நடந்து சென்ற பள்ளி மாணவன் மின் சாரம் தாக்கி உயிரிழந்தார்.

சென்னை போரூர் அருகே முகலிவாக்கம் சுப நகர் 4-வது விரிவு பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் செந்தில் - வனிதா தம்பதியின் மகன் தீனா(14). எம்ஜிஆர் நகர் அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

இவர்களது வீட்டின் பின்புறம் உள்ள சாலையில் சில மாதங் களுக்கு முன்பு மாநகராட்சி பணிக் காக பள்ளம் தோண்டி உள்ளனர். அந்தப் பணி முடியாததால் பள்ளத்தை மூடாமல் வைத்துள்ளனர். தோண்டப்பட்ட பள்ளத்தில் மின்சார வயர் வெளியே வந்துள்ளது. சில நாட்க ளாக பெய்த மழையில் அந்தப் பள்ளத்தில் நீர் தேங்கியுள்ளது. அதில் மின்கசிவு ஏற்பட்டு நீரில் மின்சாரம் பாய்ந்துள்ளது.

இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு அந்த வழியாகச் சென்ற தீனா, தண்ணீரை மிதித்து விட்டார். இதில் மின்சாரம் பாய்ந்து தண்ணீரிலேயே சுருண்டு விழுந்துள்ளார். இதைப் பார்த்த மக்கள் உடனே மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் கொடுத்து, மின் இணைப்பை துண் டித்து தீனாவை மீட்டனர். பின்னர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற் கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மாநகராட்சி, மின்வாரிய ஊழியர்களின் அலட்சியமே தீனா வின் மரணத்துக்கு காரணம் எனக் கூறி, சம்பந்தப்பட்ட அதிகாரி களை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தி தீனாவின் உடலோடு போரூர் - கிண்டி நெடுஞ் சாலையில் மக்கள் இரவில் மறியலில் ஈடுபட்டனர்.

உரிய நடவடிக்கை எடுப்ப தாக கூறி, அவர்களை மாங்காடு போலீஸார் சமாதானப்படுத்தி அனுப்பினர். தீனாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப் பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in