Published : 17 Sep 2019 07:35 AM
Last Updated : 17 Sep 2019 07:35 AM

டாக்டரின் பரிந்துரையின்றி சட்ட விரோதமாக கருக்கலைப்பு மாத்திரை விற்ற 52 மருந்து கடை மீது நடவடிக்கை: தமிழகம் முழுவதும் ஆய்வுப் பணி தீவிரம்

சென்னை

டாக்டரின் பரிந்துரை இல்லாமல் சட்ட விரோதமாக கருக்கலைப்பு மாத்திரைகளை விற்ற 52 மருந்துக் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தமிழக மருந்து தரக் கட்டுப்பாட்டுத் துறை இயக்குநர் கே.சிவபாலன் தெரிவித்தார்.

டாக்டரின் பரிந்துரை இல்லாமல் மருந்துக் கடைகளில் கருத்தடை, கருக்கலைப்பு மாத்திரைகளை வாங்கி உட்கொள்ளக் கூடாது. டாக்டரின் மருந்துச் சீட்டு இல் லாமல் இவற்றை விற்பனை செய்யக் கூடாது என்று மத்திய, மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் தொடர்ந்து அறி வுறுத்தி வருகின்றன.

ஆனாலும், மருந்துக் கடைகளில் சட்டவிரோதமாக விற்கப்படும் இந்த மாத்திரைகளை வாங்கி உட்கொள்வதால், கர்ப்பிணிகள் உயிரிழக்கும் பரிதாபமும் அவ்வப் போது நடக்கிறது. இதை மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் கண்காணித்து, சம்பந்தப்பட்ட மருந்துக் கடைகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இந்நிலையில், தமிழகம் முழு வதும் மருந்துக் கடைகளில் தமிழக மருந்து தரக் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் கடந்த ஓர் ஆண்டாக ஆய்வு செய்து வருகின்றனர். இதில், சுமார் 100 மருந்துக் கடைகளில் டாக்டரின் மருந்துச் சீட்டு இல்லாமல் சட்ட விரோதமாக கருக்கலைப்பு மாத்திரைகள் விற்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதில், முதல்கட்டமாக 52 மருந்துக் கடை கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக மருந்து தரக் கட்டுப்பாட்டுத் துறை இயக்கு நர் கே.சிவபாலன் கூறியதாவது:

கருத்தடை மாத்திரைகளை விற்க டாக்டரின் மருந்துச் சீட்டு அவ சியம் அல்ல. ஆனால், கருக் கலைப்பு மாத்திரைகளை டாக்டரின் மருந்துச் சீட்டு இல்லாமல் விற்பனை செய்யக்கூடாது. கருக்கலைப்பு மாத்திரைகளை உட்கொள்வதால் 3 மாத கருவைக்கூட கலைக்க முடியும். ஆனால், அது உயி ருக்கு மிகவும் ஆபத்தானது. அதனால்தான் மகப்பேறு டாக்டரின் பரிந்துரைப்படி மட்டுமே இந்த மாத்திரைகளை விற்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

டாக்டரின் பரிந்துரை இல்லாமல் மருந்துக் கடைகளில் கருக்கலைப்பு மாத்திரைகள் சட்ட விரோதமாக விற்கப்பட்டிருப்பது ஆய்வில் தெரியவந்தது.

இதையடுத்து, மருந்து, அழகுசாதனப் பொருட் கள் சட்டம் மற்றும் விதிகளின்படி முதல்கட்டமாக 52 மருந்துக் கடை கள் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. இன்னும் சில மருந்துக் கடைகளில் இதுதொடர்பாக விசா ரணை நடந்து வருகிறது. மருந்துக் கடைகளில் ஆய்வு செய்யும் பணி தொடர்ந்து நடக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x