Published : 17 Sep 2019 07:27 AM
Last Updated : 17 Sep 2019 07:27 AM

சித்தா கவுன்சில் கடிதம் அனுப்பி வலியுறுத்தியும் பாரம்பரிய மருத்துவ நிகழ்ச்சிகளுக்கு தடை விதிப்பதில் சிக்கல் நீடிப்பு

சென்னை

மாநில சித்தா கவுன்சில் வலியுறுத்தி யும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் பாரம்பரிய மருத்துவ நிகழ்ச்சிகளுக்கு தடை விதிப்பதில் சிக்கல் நீடிக்கிறது.

இந்திய மருத்துவ முறைகளான சித்தா, ஆயுர்வேதா, யுனானி உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவத்தின் பெயரைப் பயன் படுத்தி மோசடி சம்பவங்கள் நடை பெற்று வருகின்றன. இதை ஒழுங்குபடுத்தாததால் பல போலி டாக்டர்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலமாக நோய்களை குணப்படுத்துவதாக மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

இத்தகைய நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்க வேண்டாம் என இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்துக்கும் (டிராய்), தொலைக்காட்சி நிறு வனங்கள் மற்றும் இந்திய விளம் பரத் தரக் கட்டுப்பாட்டு கவுன்சி லுக்கும் மாநில சித்தா கவுன்சில் பதி வாளராக இருந்த ராஜசேகரன் கடிதம் அனுப்பியிருந்தார்.

இதையடுத்து, இந்த கோரிக் கைகள் அடங்கிய கடிதத்தை மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்ச கத்துக்கு சித்தா கவுன்சில் அனுப்பி யது. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதுதொடர்பாக மாநில சித்தா கவுன்சில் அதிகாரிகளிடம் கேட்ட போது, “நாங்கள் கடிதம் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் இல்லை.

மத்திய, மாநில அரசு கள் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு உரிய நட வடிக்கை எடுத்தால் மட்டுமே இதுபோன்ற தவறான நிகழ்ச்சி கள் ஒளிபரப்பாவதைத் தடுக்க முடியும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x