Published : 16 Sep 2019 06:59 PM
Last Updated : 16 Sep 2019 06:59 PM

சட்டப் படிப்பில் உளவியலை பாடமாக இணைக்க வேண்டும்: செங்கல்பட்டு சட்டக் கல்லூரி ப‌ட்டம‌ளி‌ப்பு ‌விழாவில் நீதிபதி யோசனை

செங்கல்பட்டு

செங்கல்பட்டு சட்டக் கல்லூரியின் 2-வது பட்டமளிப்பு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது.

செங்கல்பட்டு அரசு சட்டக் கல்லூரி மற்றும் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகம் இணைந்து நடத்திய 2-வது பட்டமளிப்பு விழா நேற்று முன் தினம், தமிழ்நாடு அரசு சட்டக் கல்வி இயக்குநர் என்.எஸ்.சந்தோஷ் குமார் தலைமையில், செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள கலையரங்கில் நடைபெற்றது. விழாவை கல்லூரி முதல்வர் ‌அ.விஜயலட்சுமி இராமலிங்கம் முன்னின்று நடத்தினார்.

விழாவில் சிறப்பு விருந்தினராக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கள் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, எம்.நிர் மல் குமார் ஆகியோர் பங்கேற்று 5 ஆண்டு பி.ஏ.,பிஎல்., 3 ஆண்டு எல்.எல்.பி. பயின்ற 409 மாணவ, மாணவியருக்கு பட்டங்களை வழங்கினர்.

விழாவில் நீதிபதி ஏ.டி.ஜெக தீஷ் சந்திரா பேசும்போது, "பட்டம் பெற்ற மாணவர்கள், தங்கள் திறமை மற்றும் தன்மை ஆகிய 2 முக்கியமான பண்புகளை பின் பற்ற வேண்டும், சட்டக் கல்லூரி கள் தமது பாடத்திட்டத்தில் உளவி யலை ஒரு பாடமாக இணைக்க வேண்டும்" என்று கூறினார்.

நீதிபதி எம்.நிர்மல் குமார், "செங்கல்பட்டு அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் விளையாட்டில் நல்ல திறனை வெளிப்படுத்துகின்றனர். எந்தத் தடையையும் உடைக்கும் வல்லமை விளையாட்டுக்கு உண்டு. கல்லூரிகளில் விளையாட்டுகளை அதிகம் ஊக்கப்படுத்த வேண்டும், அதேபோல் படித்த மாணவர்கள் சிறந்த வழிகாட்டியை தேடிக் கொள்ள வேண்டும்" என்றார்.

முன்னதாக தமிழ்நாடு அரசு சட்டக் கல்வி இயக்குநர் என்.எஸ்.சந்தோஷ் குமார் பேசும்போது, "இந்தியா முழுவதும் உள்ள அரசு சட்டக் கல்லூரிகளில் படித்து இது வரை ஒரு ஜனாதிபதி, 3 தலைமை நீதிபதிகள், 37 உச்ச நீதிமன்ற நீதி பதிகள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயர் நீதிமன்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள், சட்ட வல்லுநர்கள் உருவாகியுள்ளனர். இதேபோல் மாணவர்கள் வர அனைத்து வகையிலும் முயற்சி செய்ய வேண்டும்" என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x