Published : 16 Sep 2019 05:36 PM
Last Updated : 16 Sep 2019 05:36 PM

புதுச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏ பாடலுக்கு ஆடுவது போன்று வீடியோ: சைபர் கிரைம் பிரிவில் புகார்

பிரதிநிதித்துவப் படம்

புதுச்சேரி

புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் தனவேல், நிகழ்ச்சி ஒன்றில் பாடலுக்கு ஆடுவது போன்று சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்று பரப்பப்பட்டது. இந்நிலையில் புகார் தொடர்பாக பாகூர் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சைபர் கிரைம் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் வெள்ளை வேட்டி, சட்டை அணிந்து அரசியல் கட்சி பிரமுகர் போல் ஒருவர் இளைஞர் ஒருவருடன் சேர்ந்து சினிமா பாடலுக்கு ஆட்டம் போடுவது போன்ற காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த வீடியோ காட்சிக்கு இடையே பாகூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் தனவேலு நடனமாடினார் என வாசகம் இடம்பெற்றது.

இ்தைப் பார்த்து சட்டப்பேரவை உறுப்பினர் தனவேலு மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வலைதளத்தில் பதிவிட்டு சாலை மறியலிலும் ஈடுபட்டனர். மேலும் சட்டப்பேரவை உறுப்பினர் தனவேலு மறுப்பு வீடியோவும் வெளியிட்டார்.

இந்த நிலையில் சட்டப்பேரவை உறுப்பினர் தனவேலுவின் ஆதரவாளர் ராஜா என்பவர் கொடுத்த புகாரின் பேரில், பாகூர் போலீஸார் மற்றொருவர் போல் சித்தரித்து சமூக வலைதளத்தில் பரப்புவது என்ற 504 சட்டப்பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சைபர் கிரைம் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

செ.ஞானபிரகாஷ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x