Published : 04 Jul 2015 08:25 AM
Last Updated : 04 Jul 2015 08:25 AM

சமஸ்கிருத வாரத்துக்குப் பதிலாக செம்மொழி வாரம் கொண்டாட வேண்டும்: ஸ்மிருதி இரானிக்கு டி.கே.ரங்கராஜன் கடிதம்

சமஸ்கிருத வாரத்துக்குப் பதிலாக அனைத்து செம்மொழிகளையும் பெருமைப்படுத்தும் வகையில் செம்மொழி வாரம் கொண்டாட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும், மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே.ரங்கராஜன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு அவர் நேற்று அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

கடந்த நவம்பர் 25-ம் தேதி மாநிலங்களவையில் பேசும்போது, சமஸ்கிருத வாரம் மட்டும் கொண்டாடாமல் செம்மொழி வாரம் கொண்டாட வேண்டும் என வலியுறுத்தினேன். அதற்கு பதிலாக தாங்கள் எழுதிய கடிதத்தில், 1986 சிபிஎஸ்இ தேசிய கல்வி கொள்கையின் அடிப்படையில் சமஸ்கிருத வாரம் கொண்டாடப்படுவதாக தெரிவித்துள்ளீர்கள்.

சமஸ்கிருதத்துடன் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலை யாளம், ஒடியா ஆகிய செம்மொழி களையும் இணைத்து செம்மொழி வாரம் கொண்டாட வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.

ஆனால், சமஸ்கிருதத்துக்கு அளிக்கப்படும் அந்தஸ்து, மற்ற செம்மொழிகளுக்கு அளிக்கப் படவில்லை என்பது மன வருத்தம் தருகிறது. இம்மொழிகள் அனைத்தும் சமஸ்கிருதத்துக்கு இணையான வரலாற்றுச் சிறப்பும், செழுமையும் கொண்டதாகும்.

எனவே அரசால் அறிவிக் கப்பட்ட செம்மொழிகள் அனைத் தையும் பெருமைப்படுத்தும் வகையில் செம்மொழி வாரம் கொண்டாட வேண்டும். மொழி என்பது மக்களை எளிதில் உணர்ச்சிவயப்பட வைக்கும் விஷயமாகும். எனவே, இதில் பாரபட்சம் காட்டாமல், மக்களை ஒற்றுமைப்படுத்தும் வகையில் செயல்பட வேண்டும்.

இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x