Published : 16 Sep 2019 05:11 PM
Last Updated : 16 Sep 2019 05:11 PM

ஜெயலலிதா படப்பிடிப்பு தளம் அமைக்க தமிழக அரசு ரூ.1 கோடி நிதி: காசோலை வழங்கினார் முதல்வர் பழனிசாமி

சென்னை

ஜெயலலிதா படப்பிடிப்பு தளம் அமைப்பதற்கு தமிழக அரசின் சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி 1 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

காஞ்சிபுரம் மாவட்டம், பையனூரில் 26.8.2018 அன்று நடைபெற்ற திரைப்படக் கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்களால் உருவாக்கப்பட்ட எம்ஜிஆர் நூற்றாண்டு படப்பிடிப்பு தளத்தின் திறப்பு விழாவில், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் சார்பில் எம்ஜிஆர் நூற்றாண்டு படப்பிடிப்பு தளத்தின் அருகில் அரங்கம் கட்டித்தருமாறு முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அவர்களின் கோரிக்கையை ஏற்றிக்கொண்ட முதல்வர் பழனிசாமி, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயரில் அரங்கம் அமைப்பதற்கு தமிழக அரசின் சார்பில் 5 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் என்று அறிவித்தார்.

அதன்படி, ஜெயலலிதா படப்பிடிப்பு தளம் அமைப்பதற்கு தமிழக அரசின் சார்பில் 5 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் என்ற அறிவிப்புக்கு இணங்க, முதல் கட்டமாக தமிழக அரசின் சார்பில் 1 கோடி ரூபாய்க்கான காசோலையை தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே. செல்வமணியிடம் இன்று (செப்.16) தலைமைச் செயலகத்தில் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, தலைமைச் செயலாளர் க. சண்முகம் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x