

திருவண்ணாமலை
ஒரு மொழியின் மூலம் மத்திய அரசு ஆதிக்கம் செலுத்துவதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (செப்.16), திமுக சட்டப்பேரவை உறுப்பினர் சேகரனின் இல்லத் திருமண விழாவிலும் கலந்து கொண்டு பேசியதாவது:
"ஒரு மொழியைக் கொண்டு வந்து ஆதிக்கம் செலுத்துகின்ற வகையான மனப்பான்மை இன்றைக்கு மத்திய அரசுக்கு ஏற்பட்டிருக்கின்றது. அதற்கு உறுதுணையாக அடிபணிந்து இருக்கக்கூடிய ஒரு ஆட்சியாக அதிமுக ஆட்சி இருக்கிறது.
போதைப் பொருளை விற்கக்கூடாது என்று மத்திய அரசும் மாநில அரசும் உத்தரவு போட்டிருக்கிறது. ஆனால், இன்றைக்கு வெளிப்படையாக பல கடைகளில் விற்கின்றனர்.
ஆனால், அது விற்பதற்கு துணை நிற்கக் கூடியவர்கள் யார்? அந்தத் துறைக்கு மக்கள் நல்வாழ்வு துறை என்று பெயர். மக்கள் நலமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் மக்கள் நல்வாழ்வுத்துறை என்று பெயர் இருக்கின்றது.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.