

சென்னை
இந்தி மொழியை இந்தியாவின் அடையாள மொழியாக ஒருபோதும் ஏற்க முடியாது என, பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மறைந்த சுதந்திரப் போராட்ட வீரர் ராமசாமி படையாச்சியாரின் 102-வது பிறந்தநாள் இன்று (செப்.16) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், தமிழகத்தில் உள்ள அனைவரும் நல்லிணக்கத்துடன் வாழ இந்நாளில் உறுதியேற்க வேண்டும் என கூறினார்.மேலும், இந்தி மொழிக்கு ஆதரவான மத்திய அமைச்சர் அமித்ஷாவின் கருத்தை நிச்சயம் ஏற்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் கூறுகையில் "இந்தியா என்பது ஒற்றை மொழி பேசுகின்ற நாடு அல்ல. ஒரே இனத்தைச் சேர்ந்த நாடு அல்ல. ஒரு மதத்தைச் சார்ந்த நாடு அல்ல. பல்வேறு இனங்கள், பல்வேறு மதங்கள், பல்வேறு மொழிகள் பேசுகின்ற இந்தியாவில் ஒரு மொழியை திணிப்பது ஒற்றை மொழி என்று சொல்லுவதை நிச்சயமாக ஏற்க முடியாது. பிற மொழி பேசுகின்ற மக்கள், இனங்கள் இதனை ஒரு போதும் ஏற்க மாட்டார்கள். 5, 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கூடாது," என ராமதாஸ் தெரிவித்தார்.