மதுரை நகரில் குறைந்துவிட்ட பேனர் மோகம் கிராமப்புறங்களில் தொடர்வதால் கேள்விக்குறியாகும் நீதிமன்ற உத்தரவு

பாண்டி கோயில் முன் உள்ள திருமண மண்டபங்களில் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி பேனர் மற்றும் பதாகைகள் வைக்கவில்லை.
பாண்டி கோயில் முன் உள்ள திருமண மண்டபங்களில் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி பேனர் மற்றும் பதாகைகள் வைக்கவில்லை.
Updated on
1 min read

மதுரை

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, மதுரையில் திருமண மண்டபங்களில் பேனர் மற்றும் பதாகைகள் வைப்பது குறைந்து விட்டது.

சென்னையில் அண்மையில் சாலையில் கட்டியிருந்த பேனர் விழுந்ததில் சுப என்ற மென் பொறியாளர் உயிரிழந்தார். இதை யடுத்து போக்குவரத்துக்கு இடை யூறாக சாலைகளில் அனுமதியின்றி பேனர், பதாகைகள் வைக்கும் அரசியல் கட்சியினர், அமைப்பினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டது.

இதையடுத்து உள்ளாட்சி நிர்வாகம், போலீஸார் அனுமதியின்றி பேனர், பதாகை வைப்போர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்பட்டு வருவதால் மதுரையில் அனுமதியின்றி பேனர் வைப்பது குறைந்துள்ளது. மதுரை பாண்டி கோயில் அருகே 50-க்கும் மேற்பட்ட திருமண மண்டபங்கள் உள்ளன. இங்கு செவ்வாய், சனிக்கிழமை தவிர அனைத்து நாட்களிலும் காதணி விழா, கிடா வெட்டு, திருமண விழாக்கள், பூப்புனித நீராட்டு விழா நடைபெறுகின்றன.

இந்நிகழ்ச்சிக்கு வரும் முக்கியப் பிரமுகர்களை வரவேற்றும், பல் வேறு அமைப்பு, சினிமா நடி கர்களின் படங்களுடன் பேனர் வைப்பதும் வழக்கமாக இருந்தது. இதனால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், பாண்டிகோயில் பகுதியில் உள்ள மண்டபங்களில் நேற்று முகூர்த்த நாளாக இருந்தும் விழாக்களை நடத்தியவர்கள் உயர் நீதிமன்ற உத்தரவை மதித்து பேனர் மற்றும் பதாகைகளை வைக்கவில்லை. மேலும் விவரம் தெரியாமல் சிலர் வைத்த பேனர்களைப் போலீஸார் உடனடி யாக அகற்றினர். இதனால் பாண்டி கோயில் பகுதி திருமண மண்டபங்கள் பேனர்கள் இன்றி காணப்பட்டது. வாகனங்களும் நெரிசலின்றி சுலபமாகச் சென்றன.

இது குறித்து மதுரையைச் சேர்ந்த மலையரசன் கூறுகையில், உயர் நீதிமன்ற உத்தரவையடுத்து அரசியல் கட்சியினரின் விழாக்களில் பேனர் மற்றும் பதாகைகள் வைப்பது வெகுவாகக் குறைந்து விட்டது. மாநகராட்சி பகுதியில் பேனர் வைத்தால் போலீஸார் நட வடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனால் ஒத்தக்கடை அருகேயுள்ள உலகனேரி உள்ளிட்ட கிராமங்களில் பேனர், பதாகைகள் வைப்பது தொடர்கிறது. இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in