Published : 16 Sep 2019 01:00 PM
Last Updated : 16 Sep 2019 01:00 PM

திருப்பூரில் நடந்த முப்பெரும் விழாவுக்காக பிளக்ஸ் பேனர் வைத்த தேமுதிக நிர்வாகிகள் மீது வழக்கு

திருப்பூர்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் உட்பட முப்பெரும் விழாவுக்காக, திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் பிளக்ஸ் பேனர் வைத்ததற்காக, அக்கட்சி நிர்வாகிகள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை பள்ளிக்கரணை பகுதியில் சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர் சரிந்து விழுந்ததில், இளம்பெண் சுபஸ்ரீ டேங்கர் லாரியில் சிக்கி உயிரிழந்தார். இந்த சம்பவத்துக்குப் பிறகு, அரசியல் கட்சிகளுக்கு கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், பிளக்ஸ் பேனர் வைக்க தடையும் விதித்தது.

இந்நிலையில், திருப்பூர் - காங்கயம் சாலையிலுள்ள நட்சத்திர ஓட்டல் வளாகத்தில் தேமுதிக சார்பில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் உட்பட முப்பெரும் விழா நேற்று நடை பெற்றது. இதையொட்டி, முன்ன தாக மாநகர சாலைகளில் பல்வேறு பகுதிகளில் தேமுதிகவினர் சார்பில் வரவேற்பு அலங்கார கட்டமைப்பு கள், பிளக்ஸ் பேனர்கள் வைக்கப் பட்டிருந்தன. இதுதொடர்பாக எழுந்த புகாரையடுத்து, பிளக்ஸ் பேனர்களை மாநகராட்சி அதிகாரி கள் நேற்று முன்தினம் அகற்றினர்.

மேலும், பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வரைமுறை மீறி பிளக்ஸ் பேனர் வைத்ததாக, தேமுதிக நிர்வாகிகள் மீது மாநகர போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அதன்படி, வடக்கு காவல் எல்லைக்கு உட்பட்ட புதிய பேருந்து நிலையம், பெருமாநல்லூர் சாலை, புஷ்பா சந்திப்பு பகுதிகளில் பிளக்ஸ் பேனர் வைத்ததாக கட்சியின் தொட்டிபாளையம் கிளைச் செயலா ளர் வீரமணி, பிச்சம்பாளையம் புதூர் சந்திப்பு பகுதியில் பிளக்ஸ் வைத்தற்காக தேமுதிக 8-வது வட்ட செயலாளர் ராமசாமி, போயம்பாளையம் பகுதியில் பிளக்ஸ் பேனர் வைத்ததாக கட்சி உறுப்பினர்கள் சரவணன், செல்வக் குமார், பாண்டியன் நகர் பேருந்து நிறுத்தம் பகுதியில் பிளக்ஸ் வைத்ததாக தொழிற்சங்க மாவட்ட செயலாளர் என்.பாலசுப்ர மணியன், காங்கயம் சாலையில் கூட்டம் நடைபெறும் ஓட்டல் முன்புறம், ராஜீவ் நகர், சி.டி.சி. சந்திப்பு பகுதிகளில் பிளக்ஸ் பேனர் வைத்ததாக நெருப்பெரிச்சல் பகுதி கிளைச் செயலாளர் செல்வக் குமார், இளைஞரணி மாவட்ட செயலாளர் ஏ.எஸ்.மணி ஆகி யோர் மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது. இதுதொடர்பாக ஒருங்கிணைந்த திருப்பூர் மாவட்ட தேமுதிக செயலாளர் முத்து வெங்க டேஸ்வரனிடம் கேட்டபோது, ‘பொதுமக்கள் நலனுக்காக பிளக்ஸ் பேனர்கள் வைக்க வேண்டாம் என்றால் நல்ல விஷயமே.

அதிகாரிகள் கூறியவுடன் பிளக்ஸ் பேனர்களை எடுத்துவிட்டோம். மேற்கண்ட பகுதிகளில் வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனர்கள், இதுதொடர்பான உத்தரவு வரும் முன்னதாக அனுமதி பெற்று வைக்கப்பட்டவை. இருப்பினும், நிர்வாகிகள் மீது ஏன் வழக்குப் பதிவு செய்தார்கள் என்பது தெரியவில்லை. ஆலோசித்து முடிவு எடுப்போம்' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x