Published : 16 Sep 2019 12:56 PM
Last Updated : 16 Sep 2019 12:56 PM

கோவை சிறையில் பெண் கைதிகள் தயாரிக்கும் ஊறுகாய்: சிறை பஜார் மூலம் விற்பனை செய்ய முடிவு 

கோப்புப்படம்

டி.ஜி.ரகுபதி

கோவை

கோவை பெண்கள் சிறையில் தயாரிக்கப்படும் ஊறுகாய் வகைகளை சிறை பஜார் மூலம் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை மத்திய சிறை வளாகத்தில் ஆண் கைதிகள் சிறை, பெண் கைதிகள் சிறை என தனித்தனியாக உள்ளது. ஆண் கைதிகள் சிறையில் உயர் பாதுகாப்புப் பிரிவு கைதிகள், விசாரணைக் கைதிகள், தண்டனைக் கைதிகள், குண்டர் தடுப்புப் பிரிவு கைதிகள் என 1,600-க்கும் மேற்பட்டோர் அடைக் கப்பட்டுள்ளனர். பெண் கைதிகள் சிறையில் விசாரணைக் கைதிகள், தண்டனைக் கைதிகள் என 62-க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.

கோவை சிறைத்துறை உயரதி காரி ஒருவர் கூறும்போது, ‘‘சிறைச் சாலை என்பது கைதிகளை கஷ்டப் படுத்தும் இடமல்ல. அவர்கள் செய்த தவறை உணர்ந்து, திருந்துவதற் கான இடம். எனவே சிறைகளில் தமிழக அரசின் சார்பில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள் ளப்பட்டுவருகின்றன. சிறை தண் டனைக் காலம் முடிந்து வெளியே செல்லும் கைதிகள், தொழில் செய்து பிழைத்துக்கொள்ளும் வகையில் அவர்களுக்கு கைத்தொழில்கள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன.

கோவை மத்திய சிறை வளாகத் திலுள்ள, ஆண் கைதிகள் சிறையில் நூற்பாலை, விசைத்தறி, கைத்தறி தொழில்கூடங்கள் மூலம் போலீஸா ருக்கான காக்கி உடைகள், பேக்கரி பொருட்கள், தேநீர், சணல் பை, துணிப்பை, துண்டு போன்றவை உற்பத்தி செய்யப்படுகின்றன. பெண் கைதிகள் சிறையில் கம்மல், பாசி, பிரேஸ்லெட், வளையல் போன்ற கைவினைப் பொருட்கள் தயாரிப்புப் பணி மேற்கொள்ளப் படுகிறது. ஊதுபத்தியும் தயாரிக்கப் படுகிறது. தற்போது, ஊறுகாய் தயாரிப்பும் தொடங்கப்பட்டுள்ளது’’ என்றார்.

சிறைக் கண்காணிப்பாளர் ஆர்.கிருஷ்ணராஜ் கூறும்போது, ‘‘கோவை மத்திய சிறையில் கைதி களால் தயாாிக்கப்படும் பொருட் கள் சிறை பஜார் மூலம் விற்கப்படு கின்றன. இதற்கு பொதுமக்களிட மும் நன்கு வரவேற்பு உள்ளது. இதைதொடர்ந்து, அடுத்தகட்டமாக பெண் கைதிகள் சிறையில் ஊறு காய் தயாரிப்புப் பணி சில நாட் களுக்கு முன்னர் தொடங்கப்பட்டுள் ளது. எலுமிச்சை, மாங்காய், பூண்டு, தக்காளி, நாத்தங்காய், வத்தக்குழம்பு என 6 வகை ஊறுகாய் தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

100 கிராம், 200 கிராம் என இரு வித எடை அளவு பாட்டில்களில் ‘ப்ரீடம்’ என்ற பெயரில் இந்த ஊறு காய் வகைகள் தயாரிக்கப்படுகின் றன. கோவையை சேர்ந்த ‘யுவா பவுண்டேசன்’ என்ற தனியார் தொண்டு நிறுவனத்தின் உதவியின் மூலம் இந்தப் பணி மேற்கொள்ளப் படுகிறது. தற்போது 8 தண்டனைக் கைதிகள் இந்த பணியில் ஈடுபட்டுள் ளனர். இந்த ஊறுகாய் தயாரிப்ப தற்கு தேவையான மூலப் பொருட் கள், கருவிகள் சிறைத்துறை நிர் வாகத்தால் கொள்முதல் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அனைத்து கட்டமைப்புகளுடன் கூடிய ஊறு காய் தயாரிப்புக்கு ஏற்ற இடவசதி யும் பெண்கள் சிறையில் உள்ளது.

ஊறுகாயை விற்பனை செய் வதன் மூலம் வரும் தொகையை கொண்டு மூலப் பொருட்கள் கொள் முதல், தயாரிப்பு, விற்பனை சுழற்சி முறையில் மேற்கொள்ளப்படும். மேலும், விற்பனையில் கிடைக்கும் தொகையில் குறிப்பிட்ட சதவீதம் தயாரிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள கைதிகளுக்கு ஊதியமாக வழங்கப்படும். சிறைத்துறை உயரதிகாரிகளிடம் ஆலோசனை பெற்று, ஊறுகாய் வகைகளுக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டு, ஓரிரு வாரங்களில் சிறை பஜார் மூலம் விற்பனைக்கு கொண்டு வரப்படும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x