

சென்னை
சமஸ்கிருதத்தை விட தமிழ் பழமையானது எனக்கூறிய பிரதமர் நரேந்திரமோடியை ஆண்டு முழுவதும் கொண்டாட வேண்டிய தமிழக மக்கள், நன்றி மறந்து விட்டதாக, முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.
சென்னை கிண்டியில் இன்று (செப்.16) செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், "தமிழ்மொழி மிகமிகப் பழமையான மொழி. இந்த வார்த்தையை எந்த பிரதமரும் சொன்னது கிடையது. மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு தொடங்கி எந்த பிரதமரும் சொன்னது கிடையாது. பிரதமர் நரேந்திர மோடி இன்னும் ஒரு படி மேலே சென்று, சமஸ்கிருதத்தை விட பழமையான மொழி தமிழ் மொழி என்றார். தமிழ் மீது உண்மையிலேயே நமக்கு பற்று இருக்கிறது என்று சொன்னால், இதனை நாம் ஒரு ஆண்டு முழுக்கக் கொண்டாடியிருக்க வேண்டும். அதை நாம் செய்யவில்லை. கொண்டாடத் தெரியாதவன் தமிழன். நன்றி மறந்தவன் தமிழன்,” என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.