Published : 16 Sep 2019 09:55 AM
Last Updated : 16 Sep 2019 09:55 AM

தரம்சாலா மைதானத்தில் பெய்த கனமழையால் கைவிடப்பட்ட இந்திய தென் ஆப்பிரிக்கா முதல் டி20 ஆட்டம்

தரம்சாலா

தரம்சாலாவில் நடைபெற இருந்த இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான முதல் டி20 கிரிக்கெட் ஆட்டம் கனமழையின் காரணமாக கைவிடப்பட்டது

இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி தரம்சாலாவில் நேற்று இரவு 7 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. இதற்கான டாஸ் மாலை 6.30 மணிக்கு போடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், தரம்சாலாவில் நேற்று முன்தினம் முதலே மழை பெய்து வந்ததால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. ஆனால் நேற்று பிற்பகல் முதல் மழை விட்டு விட்டுப் பெய்து வந்தது.

மாலை நேரத்திலும் தொடர்ந்து கனமழை பெய்ததால் போட்டியை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் மைதானத்தைப் பரிசோதித்த நடுவர்கள், போட்டி கைவிடப்படுவதாக தெரிவித்தனர்.

இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையேயான முதல் போட்டி இது என்பதால் ஏராளமான ரசிகர்கள் மைதானத்தில் குவிந்திருந்த னர்.

போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்து மைதானத்தில் இருந்து வெளியேறினர்.

2-வது ஆட்டம்

இவ்விரு அணிகளுக்கு இடை யிலான 2-வது டி20 ஆட்டம் மொஹாலியில் செப்டம்பர் 18-ம் தேதி நடைபெறவுள்ளது. 3-வது ஆட்டம் பெங்களூரு சின்னசாமி அரங்கில் வரும் 22-ம் தேதி நடைபெறும்.

அதைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா, போர்டு பிரசிடென்ட் லெவன் அணிகளுக்கு இடையிலான 3 நாள் பயிற்சி ஆட்டம் விழியநகரத்தில் செப்டம்பர் 26 முதல் 28-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்கவுள்ளது.

அக்டோபர் 2-ம் தேதி முதல் 6-ம் தேதி முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்திலும், 10-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை 2-வது டெஸ்ட் போட்டி புனேவிலும், 19-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை 3-வது டெஸ்ட் போட்டி ராஞ்சியிலும் நடைபெறவுள் ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x