

சென்னை
5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் அறிவிப் புக்கு தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் வரவேற்பு தெரிவித்துள்ளது
இதுகுறித்து அந்த சங்கத்தின் தலைவர் வே.மணிவாசகன் வெளியிட்ட அறிக்கையில், ‘‘இல வச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி சுமார் 15 ஆண் களாக 8-ம் வகுப்பு வரை மாண வர்கள் கட்டாயத் தேர்ச்சி செய் யப்படுகின்றனர். இதனால் பெரும்பாலான மாணவர்கள் அடிப்படை கற்றல் திறன் இல் லாமல் உயர்நிலை வகுப்பு களுக்கு வந்துவிடுகின்றனர்.
பொதுத்தேர்வுள்ள 10-ம் வகுப்புக்கு வரும் 100 மாண வர்களில் 80 சதவீதம் பேருக்கு தாய்மொழியான தமிழைகூட பிழையின்றி எழுத முடியாத நிலையே உள்ளது. பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கும் பொறுப்பு குறைந்துவிடுகிறது.
தற்போது 5, 8-ம் வகுப்பு களுக்கு பொதுத்தேர்வுகள் அமல்படுத்துவதால் மாணவர் கள் கற்றல் திறன் மேம்படும். எனவே, 5, 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு என்ற அரசின் அறிவிப்புக்கு ஆதரவு தெரி விக்கிறோம்’ என்று கூறப்பட் டுள்ளது.