Published : 16 Sep 2019 09:24 AM
Last Updated : 16 Sep 2019 09:24 AM

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரிடர் பாதிப்புக்குள்ளாகும் 4,400 இடங்களில் தயார் நிலையில் 31 ஆயிரம் காப்பாளர்கள்: ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்

சென்னை

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள, பேரிடரால் பாதிக்கப்படக்கூடிய 4,399 இடங் களில் 30,759 முதல்நிலை காப் பாளர்கள் தயார்நிலையில் இருப் பதாக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள் ளார்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், வரவிருக்கும் வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் வடகிழக்கு பருவமழை காலத்தில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய கையேட்டை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்துக்கான மழை பொழி வில் சுமார் 48 சதவீதம் வடகிழக்கு பருவமழையால் கிடைக்கிறது. இந்த காலகட்டத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள், புயல்கள், சூறாவளி போன்றவற்றால் அதி கனமழை ஏற்படுகிறது. சரியான திட்டமிடல், முன்னேற்பாடுகள் மூலம் பொது சொத்துகள் சேதம் மற்றும் உயிர் சேதங்களை குறைக்க முடியும். அந்த வகையில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் எடுக்க வேண்டிய முன் னெச்சரிக்கை மற்றும் நிவாரண நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர் களுக்கும் சுற்றறிக்கைகள் அனுப் பப்பட்டுள்ளன.

மாநில அவசரகால கட்டுப் பாட்டு அறை 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. அதன் இலவச தொலைபேசி எண் ‘1070’ கண்காணிக்கப்படுகிறது. இதன்மூலம் பேரிடர் தொடர்பான தகவல்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கும் தொடர்புடைய இதர துறைகளுக்கும் அனுப்பப் பட்டு, அவர்கள் விரைவாக நடவ டிக்கை எடுக்க ஏதுவாகிறது.

பருவமழை காலத்தில், பேரிடரால் பாதிக்கக்கூடிய 4,399 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அங்கெல்லாம் 30,759 முதல்நிலை காப்பாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். அதில் 9,162 மகளி ரும் முதல்முறையாக இணைக் கப்பட்டுள்ளனர். மேலும் கால் நடைகளை காப்பாற்ற 8,624 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மருத்துவமனைகளில் உயிர் காக்கும் இயந்திரங்களுக்கு தேவை யான மின்வசதி மற்றும் இதர வசதிகளை தயார்நிலையில் வைத் திருக்க வேண்டும். தேவையான ஆக்சிஜன் உருளைகளையும் இருப்பில் வைத்திருக்க வேண் டும். ஏற்கெனவே உள்ள புயல் பாதுகாப்பு மையங்களைத் தவிர கல்லூரிகள், பள்ளிகள், அங்கன் வாடி மையங்கள், சமூகநலக் கூடங்கள், திருமணக் கூடங்கள் ஆகியவற்றை கண்டறிந்து, தேவை ஏற்படின் அவற்றை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஏரிகள், அணைகள் மற்றும் நீர் சேமிப்பு பகுதிகளை திறக்கும் போதோ அல்லது பெருவெள்ளத் தால் பாதிப்புக்கு உள்ளாகும் போதோ, மக்களுக்கு முன்னெச் சரிக்கை அளித்து பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறி வுறுத்தல்கள் மாவட்ட ஆட்சியர் கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

மேலும் சூறாவளி, புயல், இடி மின்னல் தாக்கும்போது என்னென்ன முன்னெச்சரிக்கை களை மேற்கொள்வது என்பது குறித்தும் அறிவுரைகள் வழங்கப் பட்டுள்ளன. பேரிடர் முன்னெச் சரிக்கை மற்றும் நிவாரணப் பணிகளுக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள டிஎன் ஸ்மார்ட் செயலியை, ஆசிய பசிபிக் பேரிடர் அறிக்கையில், ஒரு தனித்துவம் வாய்ந்த சிறப்புமிக்க செயலி என பாராட்டப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம் ஆண்டு தோறும் பதிவாகும் பேரிடர் மற்றும் நிவாரண விவரங்கள் அடிப்படையில், அரசு சார்பில் உரிய கொள்கை முடிவு எடுக்க ஏதுவாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்தப் பேட்டியின்போது, வருவாய் நிர்வாக ஆணையர் கே.சத்கோபால், வருவாய்த்துறை செயலர் அதுல்ய மிஸ்ரா, பேரிடர் மேலாண்மை இயக்குநர் டி.ஜகந் நாதன் ஆகியோர் உடனிருந் தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x