

சென்னை
மறைந்த சுதந்திர போராட்ட வீரர் ராமசாமி படையாட்சியாரின் 102-வது பிறந்தநாளையொட்டி சென்னை கிண்டி ஹால்டா சந்திப் பில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் இன்று (திங்கள்கிழமை) மரியாதை செலுத்தவுள்ளனர்.
இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்ச் சான்றோர்கள், சுதந் திரப் போராட்ட தியாகிகள் மற்றும் தலைவர்கள் ஆகியோரை பெரு மைப்படுத்தும் வகையில், அவர் களின் பிறந்தநாளன்று தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் அவர்களது சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி, விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த ஜூன் 29-ம் தேதி சட்டப் பேரவை விதி எண் 110-ன் கீழ் முதல்வர் வெளியிட்ட அறிவிப்பில், ‘‘சமூக நீதிக்காக பாடு பட்டவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான மறைந்த ராமசாமி படையாட்சியாரை பெருமைப் படுத்தும் வகையில், அவரது பிறந்த தினமான செப்டம்பர் 16-ம் நாள் ஆண்டுதோறும் அரசு விழா வாகக் கொண்டாடப்படும்" என அறிவிக்கப்பட்டு, அதன்படி கொண் டாடப்பட்டு வருகிறது.
மக்களுக்காக வாழ்ந்து மறைந்த ஒப்பற்ற தலைவர் ராமசாமி படையாட்சியார், கடலூர் தொகுதியிலிருந்து 1952-ம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராகவும், திண்டிவனம் தொகுதியிலிருந்து 1980 மற்றும் 1984 ஆகிய ஆண்டு களில் மக்களவை உறுப்பின ராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேலும், காமராஜர் முதல்வராக இருந்தபோது, உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். மக்கள் நலப் பணியோடு சமூக நீதிக்காகவும் அவர் தொடர்ந்து பாடுபட்டு வந்தார். முதன்முறை யாக, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்ற பிரிவு தொடங்கப்பட்டு வன்னியர் சமூகத்துக்கு மாநிலத்தில் 20 சதவீத இடஒதுக்கீடும், மத்தியில் 2 சதவீத இடஒதுக்கீடும் வழங்க வேண்டும் என்ற தீர்மானத்தை, உழைப்பாளர் கட்சி மாநாட்டில் ராமசாமி படையாட்சியார் நிறை வேற்றினார்.
கடலூர் மாவட்டம், மஞ்சக் குப்பத்தில், அவருக்கு ரூ.2 கோடியே 15 லட்சம் செலவில் 0.69 ஹெக்டேர் நிலத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் முழு உருவ வெண்கலச் சிலை யுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் சார்பில், ராமசாமி படையாட்சியார் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை, கிண்டி ஹால்டா சந்திப்பில் அமைந்துள்ள அவரின் திருவுருவச் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்படவுள்ள திருவுருவப் படத்துக்கு இன்று (16-ம் தேதி) காலை 10 மணிக்கு அமைச்சர்கள், எம்பி-க்கள், எம்எல்ஏ-க்கள், வாரியத் தலை வர்கள் மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.