

சென்னை
முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் 111-வது பிறந்த நாளையொட்டி சென்னையில் உள்ள அவரது சிலைக்கு முதல் வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தமிழக முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் 111-வது பிறந்தநாள் தமிழகம் முழுவதும் நேற்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலை மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டி ருந்தது. இந்த சிலையின் கீழ் வைக்கப்பட்டிருந்த அண் ணாவின் உருவப் படத்துக்கு முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும் அதிமுகவின் அவைத் தலைவர் மதுசூதனன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தின கரன், புதிய நீதிகட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் உள்ளிட்டோரும் அண்ணாவின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
சென்னை வள்ளுவர் கோட்டத் தில் உள்ள அண்ணாவின் சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் திமுக எம்பிக்கள் டி.ஆர்.பாலு, டி.கே.எஸ்.இளங்கோவன் மற்றும் திமுக நிர்வாகிகள் பலரும் அண் ணாவின் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.
முன்னதாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள அண்ணா சிலைக்கு திமுக தலை வர் மு.க.ஸ்டாலின் மாலை அணி வித்து மரியாதை செலுத்தினர். தமிழகம் முழுவதும் பல இடங் களில் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் அண்ணா பிறந்த நாள் விழாக்கள் கொண்டாடப் பட்டன.
பேனர்கள் தவிர்ப்பு
முதல்வரின் அறிவுறுத்தலின்படி அண்ணா பிறந்தநாள் விழாவுக்கு பேனர்கள் தவிர்க்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதேபோல், மற்ற கட்சியினரும் பேனர்களை தவிர்த்திருந்தனர். கட்சிகளின் நிர்வாகிகள் சிலர் போஸ்டர்களை மட்டும் ஒட்டியிருந்தனர்.
போக்குவரத்து மாற்றம்
அண்ணாசாலையில் உள்ள அண்ணாசிலைக்கு மாலை அணி விக்க அரசியல் தலைவர்களும், தொண்டர்களும் திரண்டதால் வாலாஜா சாலை வழியாக செல்ல வேண்டிய பேருந்துகள், வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன. இதனால், அண்ணாசாலையில் நேற்று காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரையில் போக்குவரத்து நெரிசல் இருந்தது. அதன்பிறகு, வாகனங்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டன.