Published : 16 Sep 2019 08:27 AM
Last Updated : 16 Sep 2019 08:27 AM

திமுகவுக்கு வைகோ பக்கபலம்: தமிழ் மொழி, மாநில உரிமை காக்கும் போராட்டத்துக்கு அனைவரும் தயாராக வேண்டும் - சென்னையில் நடைபெற்ற மதிமுக மாநாட்டில் மு.க.ஸ்டாலின் அழைப்பு

சென்னை

தமிழ் மொழி, மாநில உரிமை காக்கும் போராட்டத்துக்கு அனைவரும் தயாராக வேண்டும் என்று சென்னையில் நடை பெற்ற மதிமுக மாநாட்டில் திமுக தலை வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.

திமுக நிறுவனரும், முன்னாள் முதல் வருமான அண்ணாவின் 111-வது பிறந்த நாள் விழா மாநாடு மதிமுக சார்பில் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ அரங்கில் நேற்று நடைபெற்றது. நெல்லை அபுபக் கர் மதிமுக கொள்கை பாடல்களைப் பாடினார். செஞ்சி ஏ.கே.மணி மாநாட்டை திறந்து வைத்தார். ஈழவாளேந்தி மதிமுக கொடியேற்றினார். மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா மாநாட் டுக்கு தலைமை வகித்தார். மாநாட்டை தொடங்கி வைத்து மு.க.ஸ்டாலின் பேசிய தாவது:

வைகோவும், நானும் எத்தனையோ மேடைகளில் ஒன்றாக கலந்து கொண்டி ருந்தாலும் இந்த மேடையில் ஒன்றாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். கார ணம், இது நான் பங்கேற்கும் முதல் மதிமுக மாநாடு. தனித்தனி வீட்டில் இருந்தாலும் நாம் ஒரு தாய் மக்கள். பிரிந்து கிடக்கும் தமிழர்களை இணைக் கும் வலிமை தமிழன், திராவிடம், பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகிய சொற்களுக்கு உண்டு. திமுகவும், மதிமுகவும் வேறு வேறு இயக்கங்களாக பிரிந்திருந்தாலும் கொள்கையில் ஒன்றாக நிற்கிறோம்.

கருணாநிதி உடல்நலம் இல்லாமல் இருந்தபோது அவரைக் காண கோபால புரம் இல்லத்துக்கு வைகோ வந்தார். வைகோவை அடையாளம் கண்டு கருணா நிதி புன்முறுவல் பூத்தார். அவரது கரங் களையும், எனது கரங்களையும் பற்றிய வைகோ, ‘‘உங்களுக்கு எப்படி பக்கபல மாக இருந்ததேனோ, அதுபோல தம்பி ஸ்டாலினுக்கும் பக்கபலமாக இருப் பேன்’’ என்றார். கருணாநிதிக்கு கொடுத்த வாக்குறுதிப்படி வைகோ இப்போது எனக்கு பக்கபலமாக இருந்து கொண்டி ருக்கிறார்.

தமிழகம் திட்டமிட்டு பழிவாங்கப் படுகிறது. ரயில்வே, அஞ்சல் துறைகளில் தமிழ் புறக்கணிக்கப்படுகிறது. நம் உரி மையைப் பெற போராட வேண்டியி ருக்கிறது. லேசாக கண் அயர்ந்தால் இந்தியை திணித்து விடுவார்கள். கொஞ்சம் விட்டால் தமிழையே புறக்கணித்து விடுவார்கள். இப்போதும் போராட்டம் நடத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். அவர்கள் திணித் துக் கொண்டே இருக்கிறார்கள். நாம் எதிர்த்துக் கொண்டே இருக்கிறோம்.

இந்தி திணிப்பு மட்டுமல்ல, நீட், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை, காவிரி, மீத்தேன், ஹைட்ரோகார்பன், நியூட்ரினோ என தமிழகத்தை வஞ்சித்து வருகிறார்கள். ஒரு பக்கம் கலாச்சார தாக்குதல், இன்னொரு பக்கம் ரசாயன தாக்குதல். இவற்றை தடுக்க வேண்டியது நமது கடமை.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மக்களவை உறுப்பினர் அ.கணேசமூர்த்தி உள்ளிட்டோர் மாநாட் டில் பங்கேற்றனர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x