Published : 16 Sep 2019 08:04 AM
Last Updated : 16 Sep 2019 08:04 AM

உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் உருவாக்கப்பட்ட வழிகாட்டுதல்களை அமல்படுத்தாததால் பார்வையற்ற மாற்றுத்திறன் தேர்வர்கள் தவிப்பு

மு.யுவராஜ்

சென்னை

சென்னை உயர் நீதிமன்ற உத்தர வின் பேரில் உருவாக்கப்பட்ட வழி காட்டுதல்களை அமல்படுத்தாத தால் பார்வையற்ற மாற்றுத்திற னாளி தேர்வர்கள் தவித்து வரு கின்றனர்.

தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 1, குரூப் 2, விஏஓ, ஆசிரியர் தேர்வு உள்ளிட்ட பல்வேறு போட் டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வரு கின்றன. இத்தேர்வுகளை எழுதும் பார்வையற்ற மாற்றுத்திறனாளி களுக்கு உதவுவதற்காக எழுத்தர் நியமிக்கப்படுகிறார். தேர்வில் எழுத் தர் கேள்விகளை படித்துக் காட்டி தேர்வர் அளிக்கும் பதில்களை எழுதுவார்.

இந்தச் சூழலில், எழுத்தர் நிய மனத்தில் மத்திய அரசு விதித் துள்ள விதிமுறைகளை தமிழகத் தில் அமல்படுத்தக் கோரி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடரப் பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

தனி அறையில் தேர்வு

இந்த உத்தரவின் பேரில், கடந்த 2016-ம் ஆண்டு மாற்றுத்திறனாளி கள் நலத் துறையின் சார்பில் தேர் வரையும், எழுத்தரையும் தேர்வுக்கு முன்பாக பயிற்சி எடுக்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண் டும், தேர்வர் மற்றும் எழுத்தர் கூறு வதை பிறர் கேட்காத வகையில் தனி அறையில் தேர்வு நடத்த வேண் டும், எழுத்தர் தேர்வு எழுதும் பாடத் தில் நிபுணத்துவம் பெற்றவராக இருக்க வேண்டும், தேர்வர், எழுத் தர் இடையேயான உரையாடல்கள் முழுவதும் பதிவு செய்யப்பட வேண் டும், எழுத்தர் குழுவை பள்ளிக் கல்வித் துறை, உயர்கல்வித் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 18 வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட்டன.

இந்த வழிகாட்டுதல்கள் தேர்வு நடத்தும் அனைத்து துறைகளுக் கும் அனுப்பி வைக்கப்பட்டன. 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் வழிகாட்டுதல்கள் நடைமுறைப் படுத்தப்படவில்லை. இதனால், பார்வையற்ற மாற்றுத்திறனாளி தேர்வர்கள் பல்வேறு இன்னல் களை சந்தித்து வருகின்றனர்.

3 முறை படிப்பதால்...

இதுதொடர்பாக, தொடர்ந்து போட்டித் தேர்வுகளை எழுதி வரும் கரூரைச் சேர்ந்த பார்வை யற்ற மாற்றுத்திறனாளி ஜெயபால னிடம் கேட்டபோது, "போட்டித் தேர்வுகளில் எழுத்தர்கள் கேள் வியைப் படிக்கும்போது புரியும் வகையில் படிப்பதில்லை. ஒரு முறைக்கு மூன்று முறை படிக்க வேண்டியுள்ளதால் நேரம் அதிக மாக விரயமாகிறது.

நாங்கள் கூறும் பதிலை ‘டிக்’ செய்யாமல் கவனக்குறைவினால் வேறு பதிலை ‘டிக்’ செய்யும் நிகழ் வும் நடக்கிறது. இதுபோன்ற நேரங் களில் ஓஎம்ஆர் ஷீட்டில் பிளேடால் சிலர் சுரண்டிவிடுகின்றனர்.

சில தேர்வுகளில் கூடுதல் நேரம் ஒதுக்கப்படும்போது, ஒரு சில எழுத்தர்கள் "எல்லோரும் போகும் போது நான் மட்டும் உட்கார்ந்து இருக்கிறேன்" என்று புலம்புகின்ற னர்.

விரைந்து முடிக்க வேண்டும்

அது போன்ற நேரங்களில் மன தளவில் பாதிக்கப்பட்டு சரியான பதில் தெரிந்தாலும் விரைவாக தேர்வை முடிக்க வேண்டும் என்று தான் தோன்றும். இதனால், பல முறை தேர்வை சரியாக எதிர் கொள்ள முடியாமல் தவித்து உள் ளேன். பயிற்சி பெற்ற எழுத்தர்கள் நியமிக்கப்படாத காரணத்தால்தான் இந்தச் சிக்கல்கள் ஏற்படுகின்றன" என்றார்.

திருவண்ணாமலை மாவட்டத் தைச் சேர்ந்த பார்வையற்ற மாற் றுத்திறனாளி ஆசிரியர் சிவக் குமார் கூறும்போது, "கணிதம், கணக்கு பதிவியல் தேர்வுகளுக்கு வரும் எழுத்தர்கள் அந்தப் பாடத் தில் நிபுணத்துவம் பெறாத காரணத் தால் பார்முலா, கட்டம் போட்டு பிரித்து எழுத வேண்டியதை கூட வார்த்தைகளாக எழுதிவிடுகின் றனர். இதனால், மதிப்பெண் பறி போகிறது. எழுத்தர், தேர்வரின் உரையாடல் பதிவு செய்யப்படு வதில்லை. இதனால், தேர்வர் கூறும் பதிலைத்தான் எழுத்தர் எழுதினாரா என்பதை உறுதி செய்ய முடிய வில்லை.

கணினி பற்றிய புரிதல்

எனவே, தேர்வுக்கு வரும் எழுத் தர்களுக்கு பயிற்சி அளிக்க வேண் டும். கணினி மூலம் நடைபெறும் தேர்வுகளுக்கு கணினி பற்றிய புரிதல் இருப்பவர்களை மட்டுமே நியமிக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவின் பேரில் உருவாக்கப் பட்ட 18 வழிகாட்டுதல்களை உட னடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்" என்றார்.தேர்வர், எழுத்தர் கூறுவதை பிறர் கேட்காத வகையில் தனி அறையில் தேர்வு நடத்த வேண்டும். எழுத்தர் தேர்வு எழுதும் பாடத்தில் நிபுணத்துவம் பெற்றவராக இருக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x