

எல்.மோகன்
நாகர்கோவில்
ஓசோன் படலத்தை சிதைக்கும் வாயுக்களின் தீமைகளை அறிந்து, அவற்றை கட்டுப்படுத்தும் முயற் சியை ஒவ்வொருவரும் மேற் கொண்டால் 2030-ம் ஆண்டில் உலகின் வடதுருவம் முற்றிலும் சீரடையும். தமிழகத்தை உள்ள டக்கிய தென்துருவம் 2050-ம் ஆண் டில் இயல்பு நிலைக்கு வந்துவிடும் என சூழலியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
சீரான இயற்கை சூழலை நிலை நிறுத்தும் வகையில், ஓசோன் படலத்தை பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தி ஆண்டு தோறும் செப்டம்பர் 16-ம் தேதி உலக ஓசோன் தினம் கடைபிடிக் கப்படுகிறது.
சூரியனின் வெப்பக் கதிர்கள் நேரடியாக பூமியில் விழாமல் ஒரு குடையைப்போல் ஓசோன் படலம் பாதுகாக்கிறது. பெருகி வரும் வாகனங்கள், தொழிற் சாலைகள், எரிபொருட்கள் போன்ற வற்றிலிருந்து வெளியேறும் புகை மூட்டம், மாசுகலந்த வாயுவால் ஓசோன் படலம் பாதிக்கப்பட்டு துளைகள் உருவாகின்றன. கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இப் பாதிப்பு உள்ளது.
குறைந்துவரும் வனத்தின் பரப்பளவு, பூமியில் பசுமைவளம் குன்றுதல் போன்றவை புவிவெப்ப மயமாதலை அதிகரிக்கின்றன. ஓசோன் படலத்தை பாதுகாக்கா விட்டால் மனிதன் மட்டுமின்றி பூமியில் வாழும் அனைத்து உயிரி னங்களும் வாழமுடியாத நிலை ஏற்படும். ஓசோன் படலத்தை காக்க, இயற்கையைப் பாதுகாக்குமாறும், மாசு இல்லா வாழ்க்கை முறையை கடைபிடிக்குமாறும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கன்னியாகுமரி சூழலியல் ஆர்வலர் எஸ்.எஸ்.டேவிட்சன் கூறியதாவது:
இன்றைய காலகட்டத்தில் உயிரி னங்களின் உயிர்நாடியான ஓசோன் படலத்தை பாதிக்கும் நச்சுப் பொருட் களையும், வாயுக்களையும் கட்டுப் படுத்துவது பெரும் சவாலாக உள் ளது. குளோரின் போன்ற வாயுக் களின் பயன்பாட்டை அன்றாட வாழ்க்கை முறையில் படிப்படியாக குறைத்தே ஆகவேண்டும்.
ஓசோன் படலம் சிதைவால் மனிதன், விலங்குகள் மட்டுமின்றி காளான் போன்ற மென்மையான தாவரங்கள், தேனீ, வண்ணத்துப் பூச்சி போன்ற சிற்றுயிர்கள்கூட காணாமல் போகும் பேராபத்து ஏற்படும். வரம்புமீறி நேரடியாக பூமியில் விழும் வெப்பத்தால் தோல், கண், நரம்பு, மற்றும் உடல் உறுப்புகள் பாதிக்கப்படுகின்றன.
சுனாமி போன்ற கடல்சார்ந்த இயற்கை பேரழிவுகள் நிகழ்வதற் கும் ஓசோன் படலத்தில் ஏற்படும் பாதிப்பே காரணம். பூமியில் வெப் பக் காலம் நீண்டநாள் நீடிப்பதால், குளிர்காலம் குறிப்பிட்ட பருவத்தில் அமையாமல் பனிப்பாறைகள் அதிகம் உருகி வருகின்றன. இதனால் கடல்மட்டம் உயர்ந்து கடற்கரை கிராமங்களுக்குள் தண் ணீர் புகுந்து வருகிறது. ஓசோன் சமன்பாட்டை நிலைநிறுத்தினால் மட்டுமே அழிவில் இருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும் என உலக சூழலியல் வல்லுநர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
உலக நாடுகள் கடந்த 10 ஆண்டு களாக மேற்கொண்ட முயற்சியின் பலனாக 3 சதவீதம் அளவுக்கு ஓசோன் படலம் சீர்பெற்று வந்துள் ளது. கடந்த 1990-ம் ஆண்டில் இருந்து 20 ஆண்டுகளில் 135 பில்லி யன் டன் கரியமில வாயுவுக்கு சமமான வாயுக்களின் வெளியேற் றம் தடுக்கப்பட்டுள்ளது.
தற்போது குழந்தை பருவத்தில் இருந்தே ஓசோன் குறித்த விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவ தால், 2030-ம் ஆண்டில் உலகின் வடதுருவம் முற்றிலும் சீரடைய வாய்ப்புள்ளது.
தமிழகத்தை உள்ளடக்கிய தென் துருவம் 2050-ம் ஆண்டிலும், பனிப் பிரதேசங்கள் 2060-ம் ஆண்டிலும் பழைய இயற்கை சார்ந்த நிலைக்கு வந்துவிடும் என அறிவியல் வல்லு நர்களும், சூழலியலாளர்களும் கணித்துள்ளனர். எனவே, ஓசோன் படலத்தை சிதைக்கும் வாயுக்களின் தீமையை அறிந்து, அவற்றை கட் டுப்படுத்தும் முயற்சியை ஒவ் வொருவரும் மேற்கொண்டால் பூமி மீண்டும் சமநிலை அடையும்.
இவ்வாறு அவர் கூறினார்.