Published : 16 Sep 2019 07:49 AM
Last Updated : 16 Sep 2019 07:49 AM

திறந்தநிலை, தொலைநிலைக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு: பல்கலைக்கழக மானியக் குழு அறிவிப்பு

சென்னை

திறந்தநிலை, தொலைநிலை படிப்புகளில் மாணவர்கள் சேருவதற் கான கால அவகாசத்தை யுஜிசி நீட்டித்துள்ளது.

நாடு முழுவதுள்ள உயர்கல்வி நிறுவனங்களின் தொலைநிலைப் படிப்புகளை நிர்வகிக்கும் பொறுப்பு, பல்கலைக்கழக மானி யக் குழு (யுஜிசி) கட்டுப்பாட்டில் 2017-ம் ஆண்டு கொண்டு வரப் பட்டது.

திறந்தநிலை, தொலைநிலை படிப்புகளில் நடப்பு கல்வி ஆண்டு (2019-20 ) மாணவர் சேர்க்கையை ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் முடித்து விட வேண்டுமென யுஜிசி முன்பு அறிவித்திருந்தது. தற்போது இந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட் டுள்ளது.

இதுகுறித்து யுஜிசி வெளியிட்ட அறிவிப்பில், ‘‘கல்வி நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று தொலைநிலைப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை கால அவகாசம் செப்டம்பர் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. தொடர்ந்து சேர்க்கை பணிகளை முழுமையாக முடித்து அதன் விவரங்களை யுஜிசி இணையதளத்தில் அக் டோபர் 10-ம் தேதிக்குள் பதி வேற்ற வேண்டும்’’ என்று கூறப் பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘‘தொலைநிலைக் கல்வி நிறுவனத்தில் இளநிலை, முதுநிலை படிப்புகளில் மாண வர் சேர்க்கைக்கு விண்ணப்பிப் பதற்கான அவகாசம் செப்டம்பர் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

விருப்பமுள்ள மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் நேரிலோ அல்லது http://online.ideunom.ac.in என்ற இணைய தளம் மூலமாகவோ விண்ணப்பிக் கலாம். கூடுதல் விவரங்களை www.ideunom.ac.in இணையதளத்தில் அறிந்துக் கொள்ளலாம்’’ என்று கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x