

சென்னை
தமிழகம், புதுச்சேரியில் 17 மாவட் டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:
வட தமிழக பகுதிகளில் வளி மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரண மாகவும், வெப்பச் சலனம் காரண மாகவும், பெரும்பாலான மாவட் டங்களில் அனேக இடங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, கன்னியாகுமரி, தஞ்சாவூர், நாகப் பட்டினம், அரியலூர், திருவண்ணா மலை, திருச்சி, சிவகங்கை, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், மதுரை, விருதுநகர் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய 17 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது. வரும் 19-ம் தேதி வரை தமிழகம், புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழை நீடிக்கவும் வாய்ப்புள்ளது.
ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் 12 செமீ, போளூரில் 9 செமீ, ஆரணியில் 8 செமீ, மதுரை மாவட்டம் மேட்டுப்பட்டி, திரு வண்ணாமலை மாவட்டம் சாத்த னூர் அணை, புதுச்சேரி, விருது நகர் மாவட்டம் சாத்தூர், வேலூர் மாவட்டம் ஆம்பூர், விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் ஆகிய இடங்களில் தலா 7 செமீ மழை பதிவாகியுள்ளது.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.