Published : 15 Sep 2019 11:06 AM
Last Updated : 15 Sep 2019 11:06 AM

அரசு அச்சகத் துறையில் மாற்றுத்திறனாளிகளுக்கு 13% பணி வாய்ப்பு: செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்

சேலம்

அரசு அச்சகத் துறையில் முதல் வரின் உத்தரவுப்படி மாற்றுத்திற னாளிகளுக்கு 13 சதவீதத்துக்கு மேல் பணிவாய்ப்பு அளிக்கப்பட் டுள்ளது என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

சேலம் அரசு கிளை அச்சகத்தில் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு நேற்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறிய தாவது:

சேலம் அரசு அச்சகத்தில் கரு வூலத்துறை, வேளாண் துறை, மருத்துவத் துறை, தேர்வுத்துறை, பல்கலைக்கழக விடைத்தாள்கள், காவல் துறை படிவங்கள் உள் ளிட்டவற்றுக்கான முக்கிய படிவங் கள் அச்சிடப்படுகின்றன.

சேலம், ஈரோடு, நாமக்கல், திருப் பூர், கோவை, நீலகிரி, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 8 மாவட் டங்களுக்கான அரசிதழ்களும் இங்கு அச்சிடப்படுகிறது. இங்கு உள்ளாட்சித் தேர்தலுக்கான ஆவ ணங்கள் அச்சிடப்பட்டு தயார் படுத்தப்பட்டுள்ளன.

சேலம் அரசு கிளை அச்சகம் சுமார் 2.87 ஹெக்டேர் பரப்பளவில் இயங்கி வருகிறது. இதற்கு புதிய கட்டிடம் கட்டப்படும். இந்தியாவில் தமிழகத்தில்தான் அரசின் ஆவ ணங்கள் அனைத்தும் அரசு அச் சகங்களில் அச்சிடப்படுகின்றன.

தமிழகத்தில் மற்ற துறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சத வீதம் இடஒதுக்கீடு வழங்கும் நிலை யில், அரசு அச்சகத் துறையில் முதல்வரின் உத்தரவுப்படி மாற்றுத் திறனாளிகளுக்கு 13 சதவீதத் துக்கு மேல் பணிவாய்ப்பு அளிக்கப் பட்டுள்ளது. அரசு அச்சகங்களின் மூலம் அனைத்துத் துறைகளுக்கும் தேவையான ஆவணங்களை 100 சதவீதம் அச்சிடும் நிலை மேம் பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் பேனர் வைக்க வேண் டும். இதுதொடர்பாக, முதல்வர், உயர் அதிகாரிகளுடன் ஆலோ சனை நடத்தி தகுந்த முடிவை அறிவிப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x