

சென்னை
மக்களவைத் தேர்தல் பணிகளின் கூடுதல் செலவினங்களுக்கு ரூ.37 கோடியே 50 லட் சத்தை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஒதுக்கி உத்தரவிட்டுள்ளார்.
நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் 10-ம் தேதி முதல் மே 23-ம் தேதி வரை மக்களவைத் தேர்தல் நடந்தது. இதில் தமிழகத்தில் ஏப்ரல் 18-ம் தேதி தேர்தல் நடந்தது.
ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்
தமிழக மக்களவைத் தேர்தலுக்கு ரூ.413 கோடியே 86 லட்சத்து 94 ஆயிரம் ஒதுக்கப்பட்டது. தேர்தல் பணிகள் முடிந்த நிலையில், தேர்தல் தொடர்பான பணிகளுக்கு கூடுதலாக தேவைப்படும் தொகை குறித்து தெரிவிக்குமாறு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ, மாவட்ட தேர்தல் அதிகாரிகளான ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதன்படி, தேர்தல் தொடர்பான பணி களில், நிலுவையில் உள்ள படிகள், தொலை பேசி கட்டணம், விளம்பரக் கட்டணம், வாகனங் களுக்கான செலவினம், எரிபொருள் உள்ளிட் டவை குறித்து மாவட்ட வாரியாக ஆட்சியர்கள் கூடுதல் தொகை ஒதுக்க வேண்டியது குறித்து அறிக்கை அனுப்பினர்.
அதன்படி, இதர தற்காலிக செலவினங் களுக்காக ரூ.36 கோடியே 64 லட்சத்து 18 ஆயிரத்து 859, வாகன வாடகை ரூ.12 கோடியே 78 லட்சத்து 77 ஆயிரத்து 420 உட்பட ரூ.64 கோடியே 47 லட்சத்து 64 ஆயிரத்து 960 ஒதுக்கப்பட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
இதைப் பரிசீலித்த தமிழக அரசு தற்போது, இதர தற்காலிக செலவினங்களுக்காக ரூ.18 கோடியே 32 லட்சத்து 34 ஆயிரத்து 386, பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள் செலவினத்துக்காக ரூ.8 கோடியே 98 லட்சத்து 58 ஆயிரத்து 562 மற்றும் வாகன வாடகைத் தொகையாக ரூ.8 கோடியே 10 லட்சத்து 71 ஆயிரத்து 413 உட்பட ரூ.37 கோடியே 49 லட்சத்து 45 ஆயிரத்து 771 ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது.
இதுதவிர மீதமுள்ள நிலுவைத் தொகை களை பொதுத் தேர்தல்கள் துறையில் நிதி இருப்பின்போது பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது