Published : 15 Sep 2019 10:40 AM
Last Updated : 15 Sep 2019 10:40 AM

3 ஆண்டுக்குப் பிறகே தேர்ச்சி பட்டியல் வெளியாகும்: 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ஏன்? - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் விளக்கம் 

சென்னை

மாணவர்களின் கற்றல் திறனை ஆய்வு செய்யவே 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அறி முகப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு அளிக் கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் மற்றும் மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் ஆகியோர் பங்கேற்றனர். மயிலாப்பூர் எம்எல்ஏ ஆர்.நட்ராஜ், முன்னாள் எம்.பி.ஜெயவர்தன் உள்ளிட்டோரும் இதில் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு செங்கோட்டையன் பதில் அளித்ததாவது:

தமிழகத்தில் 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளதே?

ஆதிதிராவிடர் பள்ளிகள் மற்றும் பல்வேறு நிலைகளில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசு நாடு முழுவதும் அறிவித் துள்ளது. மாணவர்களின் திறனை மேம்படுத்தவும் ஆசிரியர்- மாணவர் கள் இடையில் கற்றுத்தரும் அளவை மேம்படுத்தவும் இது கொண்டு வரப்பட்டுள்ளது.

தமிழக அரசைப் பொறுத்தவரை 3 ஆண்டு காலத்துக்கு விதிவிலக்கு அளிக்க உள்ளோம். தற்போது 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதலாம். ஆனால், மூன்றாண்டுகளுக்குப்பின் அப் போது தேர்வு எழுதியதில், யார் தேர்வு பெறுகிறார்கள் என்பது பட்டியலிட்டு வெளியிடப்படும். 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்படும்.

3 ஆண்டுகளுக்குப்பின் அவர்கள் மீண்டும் அதே வகுப்பில் படிக்கும் நிலை ஏற்படுமா?

படிப்படியாக அவர்கள் கல்வித் திறனை மேம்படுத்த 3 ஆண்டுகள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், பெற்றோரிடத்தில் நல்ல வரவேற்பை தந்துள்ளது. 5 மற்றும் 8-ம்வகுப்புகளில் பொதுத் தேர்வு வரும்போது, மாணவர்களின் கற்றல் திறன் எப்படி இருக் கிறது என்பதை ஆய்வு செய்ய ஏதுவாக அமையும்.

இதனால் இடைநிற்றல் அதிக மாகும் என்று கல்வியாளர்கள் கூறுகிறார்களே?

இடைநிற்றல் அதிகரிக்க வாய்ப்பே இல்லை. கல்வியாளர்கள் அத்தனை பேரும் அன்றைய கால கட்டத்தில் ஒன்றில் இருந்து 8-ம் வகுப்புவரை பொதுத்தேர்வை சந் தித்துள்ளனர். அதனால் அவர் களுக்கு ஆட்சேபம் இல்லை. வேறு இடத்தில் இருந்துதான் இது போன்ற கருத்துகள் வருகின்றன.

மொழிப் பாடங்களுக்கு ஒரே தாள் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து பாடங்களுக் கான கேள்விகளும் ஒரே கேள்வித் தாளில் கேட்க முடியுமா?

அதற்கான கேள்வித்தாள்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. மொழிப் பாடத்தை பொறுத்தவரை அந்த மதிப்பெண்கள் உயர்கல்விக்கு தேவைப்படுவதில்லை. இருந் தாலும், மாணவர்கள், ஆசிரியர்கள் நிலையை கருத்தில் கொண்டுதான் குறைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

தொடர்ந்து, நாடு முழுவதும் இந்தி மொழியை கொண்டு வரு வது தொடர்பாக மத்திய அமைச் சர் அமித் ஷா பேசியது குறித்த கேள்விக்கு, ‘‘இரு மொழிக்கொள் கையே தமிழகத்தில் நிலைத்து நிற்கும். தமிழகத்தில் நவோதயா பள்ளி இல்லை. இருந்தால் தான் இந்தி திணிப்பு ஏற்படும்’’ என்றார்.

அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறும்போது, ‘‘தமிழகத்தில் இரு மொழிக் கொள்கைதான் உள்ளது. மக்கள் விரும்பாத எந்த மொழியும் ஏற்கப்படாது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x