

இலங்கை அதிபர் ராஜபக்சவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில், கையெழுத்து இயக்கத்தை கட்சித் தலைவர் திருமாவளவன் நேற்று தொடங்கி வைத்தார். பயணிகளிடம் அவர் கையெழுத்து வாங்கினார். பின்னர் நிருபர்களிடம் திருமாவளவன் கூறியதாவது:
இந்த இயக்கத்தின் மூலம் அடுத்த 3 நாட்களில் தமிழகம் முழுவதும் 2 லட்சம் கையெழுத்து பெற திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.