Published : 15 Sep 2019 09:58 AM
Last Updated : 15 Sep 2019 09:58 AM

திமுக இளைஞரணியில் 2 மாதத்தில் 30 லட்சம் உறுப்பினர்களை சேர்ப்போம்: உதயநிதி ஸ்டாலின் உறுதி

சென்னை

தமிழகம் முழுவதும் 30 லட்சம் இளைஞர்களை திமுக இளை ஞரணியில் உறுப்பினர்களாக சேர்க்க இலக்கு நிர்ணயித்துள்ள தாக உதயநிதி ஸ்டாலின் கூறி யுள்ளார்.

திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை பணி, தமிழகம் முழுவதும் நேற்று தொடங்கியது. நவம்பர் 14 வரை 2 மாதங்களுக்கு உறுப்பினர் சேர்க்கை நடக்கவுள்ளது. 18 முதல் 35 வயது வரை உள்ள இளை ஞர்கள், இளம்பெண்கள் தங்களது வாக்காளர் அடையாள எண் மூலம் உறுப்பினர் ஆகலாம். வாக் காளர் அடையாள அட்டை இல் லாதவர்கள் ஆதார் அட்டையைக் கொண்டு உறுப்பினராக சேரலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை தேனாம்பேட்டை தாமஸ் சாலை, சைதாப்பேட்டை தேரடித் திடல் ஆகிய இடங்களில் உறுப்பினர் சேர்க்கையை இளை ஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத் தார். சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெ.அன்பழகன், சென்னை தெற்கு மாவட்ட செய லாளர் மா.சுப்பிரமணியன் உள்ளிட் டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

அப்போது உதயநிதி பேசியதா வது:

இன்றைய இளைஞர்கள்தான் நாளைய தலைவர்கள். எனவே, திமுகவில் இளைஞரணியை பலப் படுத்துவது அவசியம். இளைஞ ரணிச் செயலாளராக நான் பொறுப் பேற்ற பிறகு நடந்த கூட்டத்தில் 30 லட்சம் இளைஞர்களை உறுப் பினர்களாக சேர்க்க தீர்மானித் தோம். இது எப்படி சாத்தியமாகும் என்று பலர் கேள்வி எழுப்பினர். திமுக இளைஞரணி நினைத்தால் எதையும் சாதிக்கும் என்று உறுதி அளித்தேன்.

பள்ளி, கல்லூரியில் படிக்கும் போதே திமுக தலைவருக்காக ஆயிரம் விளக்கு தொகுதியில் மக்களைச் சந்தித்து வாக்கு சேகரித் துள்ளேன். ஆயிரம் விளக்கு தொகுதி மக்களை நன்கு அறிவேன். தமிழகத்தில் கண்டிப்பாக ஆட்சி மாற்றம் ஏற்படும். ஸ்டாலின் முதல் வர் ஆவார். அதற்கு இளைஞரணி கடுமையாக உழைக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி, ‘‘30 லட்சம் உறுப்பினர்கள் என்ற இலக்கை திட்டமிட்ட 2 மாதங்களில் எட்டு வோம். திமுக இந்தியை எதிர்க்க வில்லை. இந்தி மொழி திணிப்பைதான் எதிர்க்கிறது. தாய் மொழியாம் தமிழைக் காக்க திமுக இளைஞரணி போராடும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x