நண்பருக்காக தந்தையிடம் ரூ.10 லட்சம் கேட்டு கடத்தல் நாடகமாடிய மகள் பிடிபட்டார்

நண்பருக்காக தந்தையிடம் ரூ.10 லட்சம் கேட்டு கடத்தல் நாடகமாடிய மகள் பிடிபட்டார்
Updated on
1 min read

சென்னை

ஆண் நண்பர் வெளிநாடு செல்ல பணம் தேவைப்பட்டதால் ரூ.10 லட்சம் கேட்டு தந்தையிடம் கடத்தல் நாடகமாடிய மகள் இளைஞருடன் பிடிபட்டுள்ளார்.

தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவருக்கு விக்னேஷ் என்ற மகனும் வித்யா என்ற மகளும் உள்ளனர். வித்யா நந்தனத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்ஸாகப் பணி செய்து வருகிறார். இருவரும் எழும்பூரில் வாடகை வீட்டில் தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.

சில தினங்களுக்கு முன்பு திருநள்ளாறில் உள்ள தனது நண்பரின் திருமணத்தில் கலந்து கொள்ள வித்யா சென்று விட்டார். திருமணம் முடிந்து காரைக்காலில் அரசு பேருந்தில் ஏறி கோயம்பேடு பேருந்து நிலையம் வந்துவிட்டதாக தனது அண்ணனுக்கு நேற்று முன்தினம் தகவல் தெரிவித்தார். ஆனால், வீடு வந்து சேரவில்லை.

இந்நிலையில் ஆறுமுகம் மற் றும் விக்னேஷை தனித்தனியாக போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர் வித்யாவை கடத்தி விட்டதாக வும் அவரை விடுவிக்க ரூ.10 லட்சம் கொடுக்க வேண்டும் என்றும் மிரட்டியுள்ளார்.

அதிர்ச்சி அடைந்த விக்னேஷ் இதுகுறித்து கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வட சென்னை காவல் கூடுதல் ஆணையர் ஆர்.தினகரன் தலைமை யிலான தனிப்படை போலீஸார் விசாரித்தனர். இதில், வித்யா கடத்தப்படவில்லை என்றும் தனது ஆண் நண்பரான காரைக் காலைச் சேர்ந்த மனோ என்பவரு டன் சேர்ந்து கடத்தல் நாடகமாடி யதை போலீஸார் கண்டறிந்தனர். வெளிநாடு செல்வதற்கு தனக்கு ரூ.10 லட்சம் தேவைப்படுவதாக மனோ, வித்யாவிடம் தெரிவித்துள் ளார். அதற்கு வித்யா தன்னுடைய அப்பாவுக்கு போன் செய்து பெண்ணை கடத்தியதாக 10 லட்சம் கேள் என்று கூறி கடத்தல் நாடகத் துக்கு துணையாக இருந்துள்ளார் என போலீஸார் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து கடலூரில் பதுங்கி இருந்த 2 பேரையும் போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in