Published : 15 Sep 2019 09:21 AM
Last Updated : 15 Sep 2019 09:21 AM

நிறுவப்பட்டு 8 ஆண்டுகளுக்கு மேலாகியும் திருச்சியில் திறக்கப்படாத சிவாஜி கணேசன் வெண்கலச் சிலை

எஸ்.கல்யாணசுந்தரம்

திருச்சி 

திருச்சி பாலக்கரை பிரபாத் ரவுண் டானாவில் நிறுவப்பட்டு 8 ஆண்டு களுக்கு மேலாகியும் திறக்கப்படா மல் உள்ள திரைப்பட நடிகர் சிவாஜி கணேசனின் உருவச்சிலையை விரைந்து திறக்க வேண்டுமென அவரது ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1928-ம் ஆண்டில் பிறந்த சிவாஜி கணேசனுக்கு இளம் வயது முதலே நடிக்கும் ஆர்வம் அதிகமாக இருந்தது. தனது இள வயதில் திருச்சி சங்கிலியாண்டபுரம் பகுதியில் இருந்த நாடகக் குழுவில் சேர்ந்து மேடை நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். பின்னர் திரையுலகில் அறிமுகமாகி 300-க் கும் மேற்பட்ட படங்களில் நடித் துள்ளார்.

குறிப்பாக இவர் நடித்த பராசக்தி, மனோகரா, வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், கர்ணன் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் இவரது உணர்ச்சி ததும்பும் நடிப் பும், வசன உச்சரிப்புகளும் இவ ருக்கு லட்சக்கணக்கான ரசிகர் களை பெற்றுத் தந்தது என்றால் அது மிகையல்ல.

தமிழ் மற்றும் தெலுங்கு, மலை யாளம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களிலும் நடித்தவர். செவாலியே விருது, இந்திய அரசின் பத்ம, பத்ம விபூஷண் உள்ளிட்ட ஏராளமான விருதுகளைப் பெற்ற சிவாஜி கணேசன் 2001-ம் ஆண்டு ஜூலை மாதம் 21-ம் தேதி கால மானார்.

இவரது மறைவுக்குப் பின்னர், திருச்சியில் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகள் திமுக ஆட்சியில் செய்யப்பட்டு 2011-ல் திருச்சி பாலக்கரை பிரபாத் ரவுண்டானா வில் சிவாஜி கணேசனுக்கு 9 அடி உயர முழு உருவ வெண்கலச் சிலை அமைக்கப்பட்டது. சிலை திறப்பதற்கு முன் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், துணியைக் கொண்டு சிலை மூடப்பட்டது. சிலை திறப்பும் கிடப்பில் போடப்பட்டது.

மக்கள் மனதில்...

தமிழ்த் திரையுலகில் மாபெரும் நடிகராக விளங்கி மக்கள் மனதில் இன்றும் நிறைந்துள்ள சிவாஜி கணேசன் திருச்சியில் தங்கி, நாட கங்களில் நடித்து வந்த சங்கிலி யாண்டபுரம் பகுதி அருகிலேயே சிலை அமைக்க முழு முயற்சி எடுத்த அவரது ரசிகர்கள், சிலை நிறுவப்பட்டு 8 ஆண்டுகளுக்கு மேலாகியும் திறக்கப்படாமல் மூடி வைக்கப்பட்டுள்ளதைக் கண்டு பெரும் மன வருத்தத்துடன் உள்ளனர்.

இதுகுறித்து கவிஞர் நந்தலாலா கூறியதாவது:

சுதந்திரப் போராட்டம், சுதந்திரப் போராட்ட வீரர்கள், ஆன்மிகவாதி கள் என பலரது வரலாற்றை சிவாஜி கணேசன் தனது நடிப் பாற்றலால் பாமர மக்களுக்கும் புரிய வைத்தவர் என்றால் அது மிகையல்ல.

மெருகேற்றிக் கொண்ட இடம்

சிவாஜி கணேசனுக்கு நடிப்பு, வசனம் ஆகியவற்றை சொல்லிக் கொடுத்த யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளை திருச்சி உறையூரைச் சேர்ந்தவர். திருச்சியில்தான் தனது நாடக நடிப்புக்கலையை சிவாஜி மெருகேற்றிக் கொண்டார்.

எனவே, திருச்சிக்கும் சிவாஜி கணேசனுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. ஆனால், திருச்சி யில் 8 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட அவரது சிலையை திறக்க முடியவில்லை.

எனவேதான் திருச்சியில் உள்ள அனைத்து கலை இலக்கிய அமைப்புகளையும் ஒருங்கி ணைத்து, ‘சிவாஜி கணேசன் சிலையை திற' என்ற ஓர் இயக் கத்தை முன்னெடுத்துள்ளோம். விரைவில் இதற்கான நடவடிக் கைகளும் தொடங்கவுள்ளன.

சிலையை இத்தனை ஆண்டு கள் திறக்காமல் இருப்பது மாபெரும் கலைஞனுக்கு செய்யும் அவமரியாதை என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x