

சென்னை
போகிப் பண்டிகைக்கு முந்தைய நாளில் சொந்த ஊருக்குச் செல்ல விரும்புவோர் இன்று ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை தங்களது சொந்த ஊர்களில் கொண்டாட ஏராளமான மக்கள் செல்வார்கள். வரும் 2020-ம் ஆண்டு ஜனவரி 15, 16 மற்றும் 17-ம் தேதி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இதற்கு முன்னதாக ஜனவரி 11-ம் தேதி சனிக்கிழமை தொடங்கி 19-ம் தேதி ஞாயிற்றுக் கிழமை வரையிலான காலகட்டத் தில் 13-ம் தேதி திங்கள்கிழமை மட்டும் வேலை நாளாகும். இதை விடுப்பு எடுத்தால் தொடர்ந்து 9 நாட்களுக்கு விடுமுறை கிடைக் கும்.
இதனால் சொந்த ஊர் செல்ல மக்கள் ஆர்வம் காட்டி வருகின்ற னர். இதுவரையில் ஜனவரி 10, 11, 12-ம் தேதி வரையில் பெரும் பாலான விரைவு ரயில்களில் படுக்கை வசதியுள்ள டிக்கெட்கள் விற்று தீர்ந்துவிட்டன.
ஏசி வகுப்புகளில் கணிசமான டிக்கெட்கள் இன்னும் இருக்கின் றன. போகிப் பண்டிகைக்கு முதல் நாள் மற்றும் அன்றையதினம் சொந்த ஊருக்குச் செல்ல டிக்கெட் முன்பதிவு செய்ய விரும்புவோர் ஜனவரி 13-க்கு இன்றும் ஜனவரி 14-க்கு நாளையும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.
இதேபோல், பண்டிகை முடிந்து சென்னை திரும்புவோர் ஜனவரி 19-ம் தேதி பயணம் செய்ய வசதியாக செப்டம்பர் 21-ம் தேதி டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.