சாலை வீதிமீறல்களுக்கு அபராதம் வசூலிக்க பிரத்யேக ‘சாப்ட்வேர்’- ஹெல்மெட் அணிபவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

சாலை வீதிமீறல்களுக்கு அபராதம் வசூலிக்க பிரத்யேக ‘சாப்ட்வேர்’- ஹெல்மெட் அணிபவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
Updated on
1 min read

 என். சன்னாசி

மதுரை 

மத்திய அரசின் புதிய மோட்டார் வாகனச் சட்ட விதிகளின்படி இருசக்கர வாகனத்தில் செல் வோர் ஹெல்மெட் அணியாமல் சென்றால், ரூ. 100- க்கு பதில் அபராதம் ரூ. 1000 ஆக உயர்த்தப் பட்டுள்ளது. பின்னால் உட் கார்ந்து செல்வோரும் அவசியம் ஹெல்மெட் அணியவேண்டும் என அதில் வலியுறுத்தப் பட்டுள்ளது.

ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டுவது, அதிவேகமாக வாகனம் இயக்குவது, மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது, ரேஸ் பைக் ஓட்டுவது, ஆம்புலன்சுக்கு வழிவிடாமல் ஓட்டுவது, வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் இன்றி செல்வது உள்ளிட்ட அனைத்து விதிமீறல்களுக்கும் அபராதத் தொகை பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய விதிகள் குறித்து போலீஸார் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரு கின்றனர்.

இந்நிலையில், விதிமீறல் தொடர்பாக அபராதத் தொகையை டிஜிட்டல் முறையில் வசூலிக்கும் திட்டமும் அறிமுகப்பட்டுள்ளது. இதற்காக இ-சலான் இயந்திரம் போக்குவரத்து, சட்டம், ஒழுங்கு போலீஸாருக்கு வழங்கப்பட் டுள்ளது. மது போதையில் வாகனம் ஓட்டுபவர்கள் தவிர, மற்றவர்களிடம் இ-சலான் இயந்திரம் மூலம் ஏடிஎம், கிரெடிட் கார்டுகள் மூலம் போலீஸார் அபராதம் வசூலிக்கின்றனர்.

சென்னை தவிர, பிற மாவட்டங்களில் புதிய சட்ட நடைமுறை இன்னும் முறையாக அமலுக்கு வரவில்லை. மேலும் புதிய வாகனச் சட்ட விதிமுறை களுக்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பி உள்ளதால் தாமத மாவதாக போலீஸார் தெரிவிக் கின்றனர்.

இதுகுறிக்கு காவல் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘ புதிய வாகன சட்டத் திருத்தம் மக்க ளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளது. ஹெல்மெட், கார் சீட் பெல்ட் அணிபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குடிபோதையில் வாகனம் ஓட்டு வோர் சிக்கினால், அவர்கள் நீதி மன்றத்தில் அபராதம் செலுத்த வேண்டி வரும். அதற்கான அபராதத் தொகை ரூ. 2 ஆயிரத்தில் இருந்து ரூ. 10 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது இன்னும் முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை. சில இடங்களில் சிக்குவோரை நீதிமன்றத்துக்கு அனுப்புகிறோம்.

மதுரை உள்ளிட்ட நகரங்களில் புதிய அபராத விவரம் அமலுக்கு வரவில்லை. இதற்கான பிரத்யேக சாப்ட்வேர் ஒன்று தயாரிக்கப் படுகிறது. இதன் மூலம் இ-சலான் உபயோகித்து அபராதம் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in