

காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் பல்வேறு இடங் களில் கொலு பொம்மைகள் தயாரிக்கப்படுகின்றன. குறிப்பாக பொம்மைகள் தயாரிப்போர் அதிகம் வசிக்கும் ஒரு தெரு, பொம்மைக்காரத் தெரு என்றே அழைக்கப்படுகிறது. இத்தெருவில் வசிக்கும் பலர் நவராத்திரி விழா வுக்காக பல்வேறு வகையான பொம்மைகளைத் தயார் செய்து வருகின்றனர்.
பல்வேறு கடவுள் பொம்மைகள், சுவாமிகளின் கல்யாணக் கோலங்கள், கிருஷ்ண லீலா, ராவண தர்பார், விவாசாயப் பணி கள், கடோத்கஜன், தேர், காய் கறிகள், பழங்கள் என பல வகை யான பொம்மைகளை தயாரித்துள் ளனர். இங்கு தயாராகும் பொம்மை கள் காஞ்சிபுரம் மட்டுமின்றி தமிழகத்தின் அனைத்து பகுதி களுக்கும் விற்பனைக்கு செல் கின்றன.
இந்த ஆண்டு புதிதாக அத்தி வரதர் பொம்மைகள் நவராத்திரி விழாவுக்காக தயாராகியுள்ளன. இந்த பொம்மையை வாங்க மக் கள் ஆர்வம் காட்டுவதாக பொம்மை தயாரிப்பாளர்கள் தெரி விக்கின்றனர். குறிப்பாக அமெ ரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய இடங்களில் வசிக்கும் தமிழர்கள் இந்த அத்திவரதர் பொம்மையை கேட்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து பொம்மைக்காரத் தெருவில் பொம்மை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பாஸ்கரன் என்பவர் கூறும்போது, ‘‘தொலை பேசியில் பொம்மைகள் கேட்டு பேசுகிறவர்களில் அதிகம் பேர் அத்திவரதர் பொம்மையைத்தான் கேட்கின்றனர். இதுவரை நான் மட்டும் 1,000 அத்திவரதர் பொம் மைகள் செய்து விற்றுள்ளேன். தொடர்ந்தும் பலர் கேட்டு வருகின்றனர். எங்களால்தான் செய்ய முடியவில்லை.
அமெரிக்கா, மலேசியா, சிங்கப் பூர் போன்ற வெளிநாடுகளுக்கும் நாங்கள் பொம்மைகளை ஏற்றுமதி செய்கிறோம். எங்களிடம் ரூ.100-ல் இருந்து ரூ.3,500 வரை மதிப்புள்ள பொம்மைகள் உள்ளன. இந்த பொம்மைகள் விலையைவிட அவற்றை அனுப்புவதற்கான கட்டணம் அதிகமாக உள்ளது. இருப்பினும் அந்த நாடுகளில் ஒப்பிடும்போது இங்கு விலை குறைவு என்பதால் பலர் இங்கிருந் துதான் பொம்மைகளை வாங்கு கின்றனர்” என்றார்.