Published : 14 Sep 2019 09:02 AM
Last Updated : 14 Sep 2019 09:02 AM

கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமாருக்கு ஜாமீன் மறுப்பு: அமலாக்கத் துறை காவல் 17-ம் தேதி வரை நீட்டிப்பு

இரா.வினோத்

புதுடெல்லி

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவரும் கர்நாடக முன்னாள் அமைச்சருமான டி.கே.சிவகுமாருக்கு ஜாமீன் வழங்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் மறுத்துவிட்டது.

டி.கே.சிவகுமாருக்கு சொந்த மான இடங்களில் கடந்த ஆண்டு வருமான வரித்துறை சோதனை நடத்தியது.இதில் கணக்கில் காட் டாமல் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.8.83 கோடி பறிமுதல் செய்யப் பட்டது.

வருமான வரித்துறை விசா ரணையில்,டி.கே.சிவகுமார் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை யில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக கடந்த 30-ம் தேதி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரான டி.கே.சிவகுமாரிடம் 4 நாட்கள் விசாரணை நடத்தப்பட் டது.

இதையடுத்து கடந்த 3-ம் தேதி டி.கே.சிவகுமார் கைது செய் யப்பட்டு, டெல்லி சிறப்பு நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை செப்டம்பர் 13ம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில் டி.கே.சிவ குமாரின் காவல், முடிவுக்கு வரு வதையொட்டி அவர் நேற்று மாலை மீண்டும் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி அஜய் குமார் குஹார் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது டி.கே.சிவகுமார் சார்பில் மூத்த வழக்கறிஞர் அபி ஷேக் சிங்வி ஆஜராகி வாதிடுகை யில் கூறியதாவது:

கடந்த 10 நாட்களாக அமலாக் கத்துறை அதிகாரிகள் தினமும் 10 மணி நேரம் டி.கேசிவகுமாரை விசாரித்து வருகின்றனர். இதனால் அவரது உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

டி.கே.சிவகுமாரை வியாழக் கிழமை மருத்துவர்கள் சோதித்த போது உயர் ரத்த அழுத்தம் இருப்பது தெரியவந்தது. எனவே அவரை மீண்டும் விசாரணைக்கு அனுமதிக்க கூடாது.

உடனடியாக ஜாமீன் வழங்கி, மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக்க வேண்டும். சரவண பவன் அதிபர் ராஜகோபா லின் உடல் நிலையை கருத்தில் கொள்ளாமல் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தினர். இதனால் அவரது உயிரே போய் விட்டது. அத்தகைய சூழலை இனிமேலும் உருவாக்கக் கூடாது.

இவ்வாறு வழக்கறிஞர் அபி ஷேக் சிங்வி வாதிட்டார்.

அமலாக்கத் துறை எதிர்ப்பு

இதற்கு அமலாக்கத்துறை சார் பில் ஆஜரான கூடுதல் சொலி சிட்டர் ஜெனரல் கே.எம்.நட் ராஜ், “டி.கே.சிவகுமார் ரூ. 200 கோடி அளவுக்கு சட்ட விரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. ரூ. 800 கோடி அளவுக்கு பினாமி பெயரில் பணப் பரிவர்த்தனை செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட் டுள்ளது. எனவே இன்னும் சில நாட்கள் விசாரிக்க அனுமதி அளிக்க வேண்டும்” என கோரினார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி அஜய்குமார் குஹார், டி.கே.சிவகுமாரை வரும் 17-ம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் விசாரிக்க அனுமதி வழங்கினார். மேலும் அவரது உடல்நிலையில் கவனம் எடுத்துக்கொள்ளவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட் டார்.

தொண்டர்கள் ஏமாற்றம்

டி.கே.சிவகுமாருக்கு ஜாமீன் கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்பில் அவரது ஆதரவாளர்கள் நீதிமன்ற வாசலில் இனிப்புகளுடன் காத்திரு ந்தனர். ஆனால் ஏமாற்றம் அடைந்த அவர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x