Published : 14 Sep 2019 08:47 AM
Last Updated : 14 Sep 2019 08:47 AM

நுகர்பொருள் வாணிபக் கிடங்குகளில் தானியங்கி சுமைதூக்கும் இயந்திரம் அறிமுகம்: கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் அமைச்சர் காமராஜ் தொடங்கிவைப்பு

கோவை

நுகர்பொருள் வாணிபக் கிடங்கு களில் தானியங்கி சுமைதூக்கும் இயந்திரம் அறிமுகம் செய்யப்பட் டுள்ளது. இதனால் மூட்டை தூக் கும் பணியாளர்களின் சுமை குறை யும் என தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் நேற்று தெரிவித்தார்.

கோவை மாவட்டம் கருமத்தம் பட்டியில் உள்ள தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகத்தின் வட்ட செயல்முறை கிடங்கில் நேற்று தானியங்கி சுமைதூக்கும் இயந்தி ரத்தை அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:

தமிழ்நாடு நுகர்பொருள் வாணி பக் கழக கிடங்குகளில் மூட்டை தூக்கும் பணியாளர்களின் சுமையை குறைக்கும் வகையில், இயந்திர கையாளுமை என்ற அடிப் படையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள 140 கிடங்குகளில் தானியங்கி சுமைதூக்கும் இயந்திரத்தைப் பயன்படுத்தி, மிக விரைவாக பணிகளை முடிக்குமாறு, சட்டப் பேரவையில் 110 விதியின்கீழ் முதல்வர் அறிவித்திருந்தார். இந்த இயந்திரங்கள் அனைத்தும் 60 நாட்களில் செயல்பாட்டுக்கு வரும்.

மாநிலம் முழுவதும் உள்ள 247 கிடங்குகளில், முதல்கட்டமாக 140 கிடங்குகளில் இந்த இயந்தி ரம் நிறுவப்படும். இதன் மூலம் மூட்டை தூக்கும் பணியாளர்களின் வேலைப்பளு குறையும், பணி களும் விரைவாக நடைபெறும்.

அத்தியாவசியப் பொருட்கள் விநியோகத் திட்டத்தை `ஒரே நாடு, ஒரே கார்டு' என்று யார் கூறினாலும், தமிழகத்தில் இதற்கு பொதுவிநியோகத் திட்டம் என்றுதான் பெயர் இருக்கும்.

ஒரே நாடு, ஒரு கார்டு திட்டத்தால் பொது விநியோகத் திட்டத்தில் எந்த மாறுதலும் இருக்காது. எந்த சிக்கலும் இல்லாமல் பொதுவிநி யோகத் திட்டம் செயல்படுத்தப் படும்.

மண்ணெண்ணெய் பற்றாக் குறையைத் தவிர்க்கும் வகையில், தமிழகத்துக்கு கூடுதலாக மண் ணெண்ணெய் ஒதுக்கீடு செய்யு மாறு மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளோம்.

ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளில் திருத்தம், பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல் போன்ற பணிகள் விரை வில் தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x