Published : 14 Sep 2019 08:44 AM
Last Updated : 14 Sep 2019 08:44 AM

அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் காலை சிற்றுண்டி வழங்கப்படும்; ஸ்ரீ சத்யசாய் அறக்கட்டளை சார்பில் கோபியில் தொடக்கம்: பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தகவல்

ஈரோடு 

ஸ்ரீ சத்யசாய் அன்னபூர்ணா அறக் கட்டளை சார்பில், தொடக்கப்பள்ளி யில் படிக்கும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் கோபியில் தொடங்கியுள்ளது. தமி ழகத்தில் உள்ள அனைத்து தொடக் கப் பள்ளிகளிலும் காலை சிற்றுண்டி வழங்க நடவடிக்கை எடுக்கப் படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டை யன் தெரிவித்தார்.

இதுகுறித்து கோபியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கோபி நகரில் ரூ.3 கோடி செல வில் மாணவர்கள் மற்றும் பொது மக்கள் பயன்பெறும் வகையில் உள்விளையாட்டு அரங்கம் அமைக் கும் பணி தொடங்கி உள்ளது. இதைப்போன்று தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சியிலும் உள்விளையாட்டு அரங்கம் அமைக் கப்படும். ஊராட்சிக்குச் சொந்த மான இடம், வருவாய்த் துறைக்குச் சொந்தமான இடம், பள்ளி விளை யாட்டு மைதானங்களில் இத்தகைய அரங்கம் அமைக்கப்படும்.

அங்கன்வாடி பணியாளர்கள், அவர்களின் பணியை எளிதாக செய்யவும், மாணவர்களுக்குத் தேவையானவற்றை உடனடியாக பெற்று வழங்கும் வகையில் அரசின் சார்பில் செல்போன் வழங் கப்பட்டுள்ளது. இஸ்ரோ அமைப் பின் மூலம் கோபி கலை அறிவி யல் கல்லூரியில் அக்டோபர் 5-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை விஞ்ஞான கண்காட்சி நடக்கவுள் ளது. இக்கண்காட்சியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர் கள் பங்கேற்கவுள்ளனர்.

மாவட்ட கல்வி அலுவலகம் மற்றும் உதவி தொடக்கக் கல்வி அலுவலகங்களில் பணியாளர்கள் பற்றாக்குறையால், பள்ளி ஆசிரி யர்களை பணி செய்ய சொல்லும் நிலை இனி இருக்காது. இந்த பணிகளை தலைமை ஆசிரியர்கள் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது.

கர்நாடகாவை சேர்ந்த சத்ய சாய் அன்னபூர்ணா அறக்கட்டளை யினர் அரசு தொடக்கப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்க முன்வந்துள்ள னர். கோபி கரட்டடிபாளையம் ஒன் றிய தொடக்கப் பள்ளியில் இத்திட் டம் இன்று தொடங்கி வைக்கப் பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளி லும் காலை சிற்றுண்டி வழங்க நட வடிக்கை எடுக்கப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x