Published : 14 Sep 2019 08:42 AM
Last Updated : 14 Sep 2019 08:42 AM

37 ஆண்டுகளுக்கு முன்பு கல்லிடைக்குறிச்சி அறம் வளர்த்த நாயகி அம்மன் கோயிலில் திருடுபோன நடராஜர் சிலை ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை வந்தது: மேலும் 20-க்கும் மேற்பட்ட சிலைகள் மீட்கவேண்டியுள்ளதாக பொன் மாணிக்கவேல் தகவல்

திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் உள்ள கோயிலில் திருடுபோன நடராஜர் சிலை ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்டது. அந்த சிலை நேற்று ரயில் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. மீட்கப்பட்ட சிலையுடன் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் மற்றும் அதிகாரிகள். படம்: க.ஸ்ரீபரத்

சென்னை

37 ஆண்டுகளுக்கு முன்னர் திரு நெல்வேலியில் மாயமான ரூ.30 கோடி மதிப்புள்ள நடராஜர் சிலை ஆஸ்திரேலியாவில் இருந்து மீட் கப்பட்டது. நேற்று சென்னை கொண்டுவரப்பட்ட சிலைக்கு மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

நெல்லை மாவட்டம் அம்பாச முத்திரத்தை அடுத்த கல்லிடைக் குறிச்சியில் உள்ள குலசேகரமுடை யார் உடனுறை அறம் வளர்த்த நாயகி அம்மன் கோயிலில் உற்சவ மூர்த்தியாக இருந்த 700 ஆண்டு பழமை வாய்ந்த நடராஜர் சிலை 37 ஆண்டுகளுக்கு முன்னர் 1982-ம் ஆண்டு திருடுபோனது. இதுதொடர் பாக விசாரணை நடத்தி வந்த அம்மாவட்ட போலீஸார் அடுத்த இரண்டு ஆண்டுகளில் வழக்கை முடித்து வைத்தனர். ஆனால், சிலை கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் தலைமையில் இந்த சிலை திருட்டு வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நடராஜர் சிலை ஆஸ்திரேலியாவில் அடிலைட் நகரில் உள்ள ஆர்ட் கேலரி ஆப் சவுத் ஆஸ்திரேலியா என்னும் அருங் காட்சியகத்தில் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. சிலையை கடத்திச் சென்ற திருட்டு கும்பல் ஆஸ்திரே லியாவில் அந்த சிலையை விற்பனை செய்துள்ளது தெரியவந்தது.

இதற்கிடையில், சிலையை ஒப்ப டைக்க அருங்காட்சியக நிர்வாகம் ஒப்புக் கொண்டதையடுத்து, விமானம் மூலம் டெல்லிக்கு சிலை கொண்டு வரப்பட்டது. இதைத் தொடர்ந்து டெல்லியில் இருந்து தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு நேற்று காலை 7 மணிக்கு வந்தடைந்தது. மிகவும் பாதுகாப்பாக கொண்டுவரப்பட்ட நடராஜர் சிலைக்கு பக்தர்கள் இசை வாத்தியங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.

சிலை கடத்தல் தொடர்பான வழக்குகள் கும்பகோணத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதால் நடராஜர் சிலை அங்கு எடுத்துச் செல்லப்பட்டு மீண்டும் நெல்லைக்கு கொண்டு செல்லப்படும் என சிலை கடத்தல் பிரிவு போலீஸார் தெரிவித்தனர்.

இதுகுறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

நடராஜர் சிலையை தமிழகம் கொண்டு வர முதல் காரணம் நீதிமன்றம்தான். இதன் பெருமை நீதிமன்றத்தைத்தான் சேரும். அவர்களுக்கு நன்றி. மேலும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய தொல்லியல் துறை மற்றும் மத்திய வெளியுறவு துறை அமைச்சகத்தைச் சேர்ந்த அதிகாரிகளுக்கும் நன்றி. எதிர் காலத்தில் என்ன நடந்தாலும் சரி நாங்கள் நீதிமன்றத்துக்கு நேர் மையாக செயல்படுவோம். திருடு போன இந்த சிலை பல நாடு களுக்குச் சென்று, 4 கண்டங்கள் தாண்டி இறுதியில் ஆஸ்திரேலியா சென்றுள்ளது.

இந்த சிலையோடு 50-க்கும் மேற்பட்ட கலைநயம் மிக்க தூண்களும் கடத்தப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அதையும் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது. வெளிநாட்டு கலாச் சாரத்தில் இந்த சிலை காட்சிப் பொருளாக இருக்கலாம். ஆனால் இந்த சிலை காட்சி பொருள் அல்ல. கடந்த மாதம் 26-ம் தேதியே சிலை தமிழகத்துக்கு வர வேண்டியது. சில காரணங்களால் தாமதமானது.

நாங்கள் யாரையும் குறைசெல்ல விரும்பவில்லை. இதுபோன்று 20-க் கும் மேற்பட்ட சிலைகள் அங் கிருந்து மீட்கப்பட வேண்டியுள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள அந்த கலைக்கூட நிர்வாகிகள், இது திருடப்பட்ட சிலைகள் என்பது தெரியாமல் விலை கொடுத்து வாங்கியுள்ளனர். இருந்தாலும் அவர்கள் பெருந்தன்மையுடன் நாங்கள் சிலைகளை ஒப்படைத்து விடுகிறோம். ஆனால் அந்த சிலை களை தமிழகம் கொண்டு செல்லும் செலவை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றனர்.

நாங்கள் இது சம்பந்தமான கோரிக்கையை அரசிடம் வலி யுறுத்தியுள்ளோம். இவர்கள் சிலையை கொடுத்துவிட்டதால், மற்ற நாடுகளில் இருக்கும், தமிழகத்தில் இருந்து திருடப்பட்ட சிலைகளை அவர்கள் நம்மிடம் ஒப்படைக்க அதிகம் வாய்ப்புள் ளது. சிலைகள் கொண்டு வரும் செலவு அமைச்சர்கள் அவர்களின் உதவியாளர்களுக்கு, வாங்கி கொடுக்கும் காரின் விலையை விட குறைவு தான். அதனால் அரசு இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிங்கப்பூர், அமெரிக்கா, ஆஸ் திரேலியாவில் இருந்து 20-க்கும் மேற்பட்ட சிலைகள் கொண்டு வரப்பட வேண்டியுள்ளது. சிங்கப்பூரில் மட்டும் 18 சிலைகள் உள்ளன. இன்றைய காலகட்டத்தில் ரூ.300 கோடிக்கு மேல் மதிப்புள்ள, 70 வருடத்துக்கு முன்பு திருடப்பட்ட செம்பியன் மாதேவியின் சிலை, வீரசோழபுரத்தில் உள்ள மாரீஷ் வரர் கோயிலில் திருடப்பட்ட ரூ.100 கோடிக்கு மேல் மதிப்புள்ள 3 சிலைகளையும் மீட்க வேண்டும்.

அரசு எங்களுக்கு ஒத்துழைத் தால் நாங்கள் மீட்டு கொண்டு வருவோம். நடுவில் இருக்கும் சில அரசு அதிகாரிகள் எங்கள் தகவல்களை, ஆட்சியாளர்களுக்கு சரியாக கொண்டு போய் சேர்ப் பதில்லை. நாங்கள் யாரையும் குறை கூறவில்லை. மீட்டு கொண்டு வரப்பட்ட நடராஜர் சிலை கும்ப கோணம் சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும். பின்னர் இந்த சிலை கல்லிடைக்குறிச்சிக்கு கொண்டு செல்லப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x