Published : 14 Sep 2019 08:39 AM
Last Updated : 14 Sep 2019 08:39 AM

மழைநீர் சேகரிப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு, டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்து சென்னையில் 4,000 பேர் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி: முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

டெங்கு காய்ச்சல், மழைநீர் சேகரிப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியை முதல்வர் பழனிசாமி சென்னை தீவுத் திடலில் நேற்று தொடங்கி வைத்தார். உடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், வி.சரோஜா உள்ளிட்டோர்.

சென்னை

மழைநீர் சேகரிப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு, டெங்கு நோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

மழைநீர் சேகரிப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு, டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளும் பல்வேறு விழிப் புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.

இதன் ஒருபகுதியாக பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத் தும் நோக்கில் தமிழக சுகாதாரத் துறை, சென்னை மாநகராட்சியின் சுகாதாரப் பிரிவுசார்பில் சென்னை யில் நேற்று பேரணி நடத்தப்பட்டது. தீவுத்திடலில் இப்பேரணியை முதல்வர் பழனிசாமி கொடி யசைத்து தொடங்கி வைத்தார்.

இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், பி.தங்க மணி, எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக் குமார், கே.பி.அன்பழகன், வி.சரோஜா, சி.விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜு, ப.பெஞ்சமின், சேவூர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தீவுத்திடலில் இருந்து தொடங்கிய பேரணி, நேப்பியர் பாலம், சிவானந்தா சாலை வழியாக ஓமந்தூரார் அரசினர் தோட்டம் வளாகத்தில் உள்ள ராஜாஜி மண்டபம் அருகில் நிறைவடைந்தது.

இதில் சென்னை மாநகராட்சி பள்ளிகளின் மாணவ, மாணவிகள், செவிலியர்கள், சுகாதாரப் பணி யாளர்கள், அங்கன்வாடி ஊழி யர்கள் உட்பட 4 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

மழைநீர் சேகரிப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு, டெங்கு நோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திய படி அவர்கள் ஊர்வலமாகச் சென்றனர்.

இந்த பேரணியில் சுகாதாரத் துறை, சென்னை மாநகராட்சி சார்பில் வீடியோ படக்காட்சி, செய்முறை விளக்கங்கள் அடங்கிய நடமாடும் விழிப்புணர்வு வாகனங்களும் இடம்பெற்றன.இதில் ஒளிபரப்பான விழிப் புணர்வு நிகழ்வுகளை பொதுமக்கள் பார்த்தனர்.

இதன் மூலமாகவும் டெங்கு நோய் தடுப்பு குறித்து விழிப் புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x