

சென்னை
வெளிநாட்டு முதலீடு விவகாரத் தில் காழ்ப்புணர்ச்சி காரணமாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டா லின் அவதூறு பரப்புவதாக அமைச் சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் நேற்று வெளியிட்ட அறிக்கை:
கடந்த ஜனவரியில் நடந்த உலக முதலீட்டாளர் மாநாட்டை தொடர்ந்து, 9 மாதங்களில் முதல் வரால், 22 நிறுவனங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. 4 நிறு வனங்களில் வணிக உற்பத்தி யும் தொடங்கப்பட்டது. ஹூண் டாய் நிறுவனத்தின் புதிய மின் சார வாகனம் வெற்றிகரமாக அறிமுகப்படுத்தப்பட்டது.
ஆனால், தங்கள் ஆட்சிக் காலத்தில் தமிழகத்தையே இரு ளில் மூழ்கடித்து, தொழில் நிறுவ னங்களை சொல்லொணாத் துயரில் ஆழ்த்தியவர்கள், தற் போது தமிழகத்தில் தொழில் துறையின் வெற்றிப்பயணத்தைப் பொறுக்க முடியாமல் வெற்றுக் கூச்சல் போடுகின்றனர்.
ரிசர்வ் வங்கியின் புள்ளி விவரங்கள்படி, 2006 ம் ஆண்டு ஜூன் முதல் 2011 மே வரையிலான திமுக ஆட்சியில் வந்த மொத்த அந்நிய நேரடி முதலீடு ரூ.25 ஆயிரத்து 977 கோடி மட்டுமே. ஆனால், 2011-ம் ஆண்டு ஜூன் முதல் 2019 ஜூன் வரையிலான அதிமுக ஆட்சிக்காலத்தில் வந்த அந்நிய நேரடி முதலீடு ரூ.1 லட்சத்து 47ஆயிரம் கோடியாகும்.
கடந்த 2015-ல் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், புரிந் துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத் திட்ட பல்வேறு நிறுவனங்களில் ரூ.1 லட்சத்து 4 ஆயிரத்து 961 கோடி முதலீடு பல்வேறு நிலைகளில் செயல்பாட்டில் உள் ளது. இதன்மூலம் 1 லட்சத்து 61,822 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு உலக முதலீட் டாளர்கள் மாநாட்டில், 304 புரிந் துணர்வு ஒப்பந்தங்கள், குறு, சிறு, நடுத்தர தொழில் துறை சார்பில் கையொப்பம் இடப்பட்ட 12,360 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் உத்தரவாதம் அளிக்கப்பட்ட முத லீடு ரூ.3 லட்சத்து 431 கோடி.
இதுதவிர, சியட், சீமன்ஸ், ஜின்யோங் சாந்தார், ஹெடெக் கியர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களும் தமிழகத்தில் முதலீடு செய் துள்ளன. இதில் சியட் நிறுவனம் ரூ.4 ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ளது. இதுதவிர, தற்போது முதல்வர் மேற்கொண்ட வெளிநாட்டு பயணத்தின் மூலம் 41 நிறுவனங்கள் வாயிலாக ரூ.8 ஆயிரத்து 835 கோடிக்கு முதலீடுகள் வந்துள்ளன.
மற்ற மாநில முதல்வர்கள் முதலீடுகளை பெற வெளிநாடுகள் செல்லும் போது, அம்மாநில எதிர்க்கட்சித்தலைவர்கள் உட் பட அனைவரும் வரவேற்று ஒத்துழைக்கின்றனர். தமிழகத்தில் மட்டும் தான் காழ்ப்புணர்ச்சி காரணமாக எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் அவதூறு பரப்பி வருகிறார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.