நோய்கள் பெருகுவதற்கு தவறான உணவு பழக்கமே காரணம்; பாரம்பரிய உணவுகளை உண்டு நலமுடன் வாழ்வோம்: பொதுமக்களுக்கு முதல்வர் பழனிசாமி அறிவுறுத்தல்

தமிழக அரசின் சுகாதாரம், உணவு பாதுகாப்பு, சமூக நலன், மீன்வளம் ஆகிய துறைகள் சார்பில், ‘மதராசபட்டினம் விருந்து‘ என்ற பாரம்பரிய உணவு கண்காட்சி மற்றும் விற்பனையை சென்னை தீவுத்திடலில் நேற்று தொடங்கி வைத்து பார்வையிடுகிறார் முதல்வர் பழனிசாமி. உடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள்.படம்: ம.பிரபு
தமிழக அரசின் சுகாதாரம், உணவு பாதுகாப்பு, சமூக நலன், மீன்வளம் ஆகிய துறைகள் சார்பில், ‘மதராசபட்டினம் விருந்து‘ என்ற பாரம்பரிய உணவு கண்காட்சி மற்றும் விற்பனையை சென்னை தீவுத்திடலில் நேற்று தொடங்கி வைத்து பார்வையிடுகிறார் முதல்வர் பழனிசாமி. உடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள்.படம்: ம.பிரபு
Updated on
2 min read

சென்னை

ரத்த அழுத்தம், நீரிழிவு, இதய நோய்கள் பெருகுவதற்கு தவறான உணவுப் பழக்கமே காரணம். பாரம் பரிய உணவுகளை உட்கொண்டு நல முடன் வாழ்வோம் என்று பொது மக்களுக்கு முதல்வர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

தமிழக அரசின் சுகாதாரம், உணவு பாதுகாப்பு, சமூக நலன், மீன்வளம் ஆகிய துறைகள் சார்பில், ‘ மதராசபட்டினம் விருந்து- வாங்க ரசிக்கலாம், ருசிக்கலாம்’ என்ற பெயரில் பாரம்பரிய உணவுகள் கண்காட்சி மற்றும் விற்பனை, சென்னை தீவுத்திடலில் நேற்று தொடங்கியது. 3 நாட்கள் நடக்கும் இந்த விருந்து திருவிழா அரங்கை முதல்வர் பழனிசாமி திறந்துவைத்து அரங்குகளை பார்வையிட்டார்.

விழாவில் அவர் பேசியதாவது:

‘உணவே மருந்து- மருந்தே உணவு’ என்பது ஆன்றோர் வாக்கு. ஆனால், இன்று உணவு அலங் காரப் பொருளாக மாறிவிட்டது. வெவ்வேறு நாட்டின் உணவு வகை கள், விதவிதமான சமையல் வகை களுக்கு நம் நாக்கு அடிமை யாகிவிட்டது. நாம் ஆரோக்கியமாக வாழ, முன்னோர் உட்கொண்ட சத்தான உணவுகளையே உண்ண வேண்டும்.

இப்போதெல்லாம் இளம் வயதி லேயே மக்களுக்கு ரத்த அழுத்தம், நீரிழிவு, இதய நோய்கள் பெருகி வருவதற்கு காரணம் தவறான உணவு பழக்க வழக்கமே. பாரம் பரிய உணவுகளை அன்றாடம் பயன்படுத்தியதாலும், உடல் உழைப்பை மூலதனமாக கொண்டு வாழ்ந்ததாலும் நம் முன்னோருக்கு இந்த நோய்கள் அரிதாக காணப்பட்டது. நமது அன்றாட வாழ்வில் பாரம்பரிய உணவு பழக்கத்துடன் உடற்பயிற்சியும் மேற்கொண்டு ஆரோக்கியமாக வாழ வேண்டும்.

மாவட்டம்தோறும் பல்வேறு உணவு வணிகர்களை தேர்ந்தெ டுத்து அவர்களை ஒருங்கிணைத்து, உணவின் சிறப்பை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் வகையில் இந்த விருந்து ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. இந்த விருந்தின் முக்கிய அம்சமாக அடுத்த 3 நாட்களுக்கு பல்வேறு சுவைகளை படைக்க 160 அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் இடம் பெறுகின்றன.

நாம் மறந்து கைவிட்ட முன்னோர் களின் பாரம்பரிய உணவை இனி தினமும் எடுத்துக் கொண்டு நலமுடன் வாழ உறுதியேற்போம்.

இவ்வாறு முதல்வர் பேசினார்.

நிகழ்ச்சிக்கு தலைமையேற்ற துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, ‘‘தற்போது ஏராள மான இளைஞர்களும், குழந்தை களும் பர்கர், பீஸா போன்ற துரித உணவுகளுக்கு ஆட்பட்டு உள்ளனர் என்பது வேதனையாக உள்ளது. அவற்றில் உப்பு, கொழுப்பு, சர்க்கரை அதிகம் உள்ள தால் நினைவாற்றல் குறைவு, தலைவலி, உடல்சோர்வு, உடல் எடை அதிகரிப்பு உட்பட பல்வேறு நோய்கள் வருகின்றன. எனவே, துரித உணவுகள், அதிக எண்ணெய் உள்ள உணவுகளை மக்கள் தவிர்க்க வேண்டும். இளநீர், மோர், பழச்சாறு ஆகியவற்றை அருந்தி னால் உடலுக்கு மிகுந்த ஆரோக் கியத்தை அளிக்கும்’’ என்றார்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, பி.தங்கமணி, எஸ்.பி.வேலு மணி, டி.ஜெயக்குமார், கே.பி.அன்ப ழகன், சரோஜா, சி.விஜயபாஸ்கர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

என்னென்ன கிடைக்கும்

‘மதராச பட்டினம் விருந்து’ திருவிழாவில் 160 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் மதுரை ஜிகர்தண்டா, கோவில்பட்டி கடலைமிட்டாய் முதல் பர்மாவின் அத்தோ வரை கிடைக்கிறது. திரு நெல்வேலி அல்வா, தட்டு இட்லி, சேலம் தட்டுவடை, பல்வேறு பிரி யாணி வகைகள், சுய உதவிக் குழுக் களின் பல்வேறு தயாரிப்புகள், மண்பானை மோர், பிரபல நிறு வனங்களின் இனிப்புகளுக்கு தனி அரங்குகள் இடம்பெற்றுள்ளன. மேலும், தமிழ்நாடு மீன் வளர்ச் சிக் கழகம், யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிக் கழகம், சிட்டிசன் கன்ஸ்யூமர் அண்ட் சிவிக் ஆக் ஷன் குரூப் (சிஏஜி) ஆகியோரின் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் இடம் பெற்றுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in