Published : 14 Sep 2019 08:04 AM
Last Updated : 14 Sep 2019 08:04 AM

வெள்ளப் பெருக்கெடுத்து கடலில் கலக்கும் சமயத்தில்கூட புதுக்கோட்டை மாவட்ட கடைமடைக்கு வராத காவிரி நீர்: 550 கனஅடி நீரை வழங்க அலுவலர்கள் மறுப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டு

புதுக்கோட்டை மாவட்டம் நாகுடி பகுதியில் விதைக்கப்பட்ட நிலையில் தண்ணீருக்காக காத்திருக்கும் நெற்பயிர்கள்.படங்கள்: கே.சுரேஷ்

கே.சுரேஷ்

புதுக்கோட்டை

பெருக்கெடுத்து வரும் காவிரி நீர் கொள்ளிடம் ஆற்றின் வழியே கடலுக்கு திறந்துவிடப்பட்டு வரும் நிலையிலும்கூட, புதுக்கோட்டை மாவட்டத்தின் கடைமடைக்கு 550 கனஅடி தண்ணீரை தினந்தோறும் வழங்க அலுவலர்கள் மறுப்ப தாக விவசாயிகள் குற்றம் சாட்டு கின்றனர்.

கல்லணையில் இருந்து கல்ல ணைக் கால்வாய் மூலம் புதுக் கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டாரத்தில் சுமார் 25 ஆயிரம் ஏக்கரில் காவிரி நீரைக்கொண்டு சாகுபடி செய்யப்படுகிறது.

வழக்கமாக மேற்பனைக்காடு கதவணைக்கு 550கனஅடியும், நாகுடி கதவணைக்கு 300 கனஅடி தண்ணீரும் வரும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக கல்லணைக் கால்வாயின் பிரதான வாய்க்கால் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதாலும், கரைகள் பலமிழந்து உள்ளதாலும் இந்தக் கால்வாயில் அதிகபட்ச மாக 4,500 கனஅடி தண்ணீரைத் திறக்காமல் சுமார் 2,500 கனஅடியே திறக்கப்படுகிறது.

இதனால், டெல்டாவின் கடைமடையான புதுக்கோட்டை மாவட்டத்துக்கு வாரத்துக்கு ஒரு முறை வீதம் குறிப்பிட்ட தடவை தண்ணீர் பகிர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் சாகுபடிக்கு உத்தரவாதம் இல்லாத சூழல் இருப்பதால் சாகுபடி செய்வதற்கு விவசாயிகள் ஆர்வம் காட்ட வில்லை.

இதேநிலை தொடர்வதால் கால் வாயின் கரைகளை பலப்படுத்தி முழு கொள்ளளவுக்கு தண்ணீரை திறக்க வேண்டுமென வலியுறுத்தி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அதன்பிறகு, கடந்த சில நாட் களாக கொள்ளிடம் ஆற்றில் திறக் கப்படும் 13,000 கனஅடி முதல் 17,000 கனஅடி வரை தண்ணீர் கடலுக்குச் செல்கிறது.

இவ்வாறு காவிரியில் பெருக் கெடுக்கும்போதெல்லாம் கடலுக்கு திருப்பி விடுவதிலேயே அக்கறை காட்டும் அரசு, கடைமடைப் பகுதிக்கு திருப்பிவிட மறுப்பது வேதனை அளிப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

இதுகுறித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள கண்டை யன்கோட்டை விவசாயி கண்ணன் கூறியது:

தொடர் போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டத்துக்கு 550 கனஅடி தண்ணீரை திறந்து விடக் கோரி கடந்த ஆண்டு கடை மடை விவசாயிகள் தொடர் போராட் டத்தில் ஈடுபட்டனர். அதன்பிறகு தமிழக முதல்வரைச் சந்தித்து வலியுறுத்தி ஓராண்டாகியும் எந்த முன்னேற்றமும் இல்லை.

தற்போது கொள்ளிடம் ஆறு வழியாக குறைந்தது 13,000 கனஅடி முதல் அதிகபட்சம் 17,000 கனஅடி வரை தண்ணீர் கடலுக்குச் செல்கிறது. ஆனால், நாங்கள் கேட்பது வெறும் 550 கனஅடி தண்ணீர்தான். அதைக்கொடுக்க ஏன் மறுக்க வேண்டும்.

கரைகளை பலப்படுத்தி...

பூதலூரில் இருந்து தஞ்சாவூர் வரை கல்லணைக் கால்வாயின் கரைகளை பலப்படுத்தி 4,500 கனஅடி தண்ணீரை திறக்க வேண்டுமென வலியுறுத்தி வழக்கு தொடரப்பட்டுள்ளது. செப்.16-ம் தேதி இவ்வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.

கோரிக்கை குறித்து வலியுறுத் தும்போதெல்லாம் அரசு நிதி ஒதுக்கி கிளை வாய்க்கால்களை தூர்வார ஒப்பந்தம் விடுகிறது. அந்த நிதி யிலும் ஆளும் கட்சியினரால் முறை கேடு செய்யப்படுகிறது என்றார்.

கால்வாயை பலப்படுத்த கருத்துரு

இதுகுறித்து கல்லணைக் கால் வாய் பாசன பிரிவு பொறியாளர்கள் வட்டாரத்தில் கூறியதாவது:

கல்லணையில் இருந்து கல்ல ணைக் கால்வாயில் முழு கொள்ள ளவில் தண்ணீர் திறந்தால்தான் புதுக்கோட்டை மாவட்ட கடை மடைக்கு உரிய அளவுப்படி தினமும் தண்ணீர் கொடுக்க முடியும். முழு கொள்ளளவு திறப்பதாக இருந்தால் கால்வாய் பலப்படுத்த வேண்டும். விவசாயிகளின் கோரிக் கையை ஏற்று கால்வாயைப் பலப் படுத்த கல்லணைக் கால்வா யின் வாய்க்கால்கள் நீட்டித்தல், புதுப்பித்தல் மற்றும் நவீனப்படுத்து தல் (இஆர்எம்) திட்டத்தில் நிதி ஒதுக்கீடு கோரி அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தற்போது சுழற்சி முறையில் அனைத்து வாய்க்கால்களிலும் தண்ணீர் கொண்டு செல்லப்படு கிறது. வாய்க்கால்கள் தூர் வாரும் பணி மேற்கொள்ளப்படும் இடங்களில் தாமதம் ஏற்படுகிறது என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x