Published : 13 Sep 2019 11:22 AM
Last Updated : 13 Sep 2019 11:22 AM

மதுரை மருத்துவக் கல்லூரி முதுநிலை மாணவர் தற்கொலை: பணிச்சுமையால் நிகழ்ந்த சோகம்

மாணவர் உதயராஜ்

மதுரை,

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் மயக்கவியல் துறையில் முதுநிலை படிக்கும் முதலாம் ஆண்டு மாணவர் விடுதி அறையில் மயக்க ஊசிப் போட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை சேர்ந்தவர் உத்ராபதி. தொழில் அதிபர். இவரது மகன் உதயராஜ்(29). மதுரை அரசு ருத்துவக்கல்லூரியில் மயக்கவியல் துறையில் (anesthesiadepartment) முதுநிலை முதலாம் ஆண்டு படித்தார்.

கல்லூரி விடுதியில் தங்கி படிக்காமல் மற்றொரு மாணவர் ஒருவருடன் வெளியே வீடு எடுத்து தங்கிப் படித்து வந்தார். இந்நிலையில் நேற்றிரவு இவர் தனது அறையைப் பூட்டிக் கொண்டு மயக்க ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மதிச்சியம் போலீஸார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். உடனே பிரேத பரிசோதனை முடிந்து உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இன்ஸ்பெக்டர் அனுராதா விசாரணை நடத்தி வருகிறார். உதயராஜ் சென்னை ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்துள்ளார். அரியலூரில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்து வந்த நியைலில் மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மயக்கவியல் படிக்க இடம் கிடைத்துள்ளது.

முதுநிலை மருத்துவப் படிப்பில் சேர்ந்து மூன்று மாதங்களே ஆகின்றன.உதயராஜ், மிகுந்த அமைதியாகக் காணப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டது அவரது பெற்றோருக்கும் நண்பர்களுக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போலீஸார் கூறுகையில், ‘‘மாணவர் உதயராஜ் கடிதம் எழுதி வைத்துவிட்டு இறந்துள்ளார். அந்த கடிதத்தில் மருத்துவமனையில் வேலைப்பழு அதிகமாக இருக்கிறது. தன்னால் தொடர்ந்து படிக்க முடியவில்லை. அதனாலே, இந்த முடிவை எடுக்கிறேன் என்று மட்டும் குறிப்பிட்டுள்ளார். யாரையும் தனிப்பட்ட முறையில் புகார் சொல்லவில்லை. உடன் தங்கி படித்த மாணவரிடம் விசாரித்தபோது படிப்பைத் தவிர அவருக்கு வேறு எந்த நெருக்கடியும் இல்லை என்று கூறினார். ஆனாலும், தற்கொலைக்கு வேறு காரணங்கள் இருக்குமா? என்று விசாரிக்கிறோம், ’’ என்றனர்.

மருத்துவப் பேராசிரியர்கள் கூறுகையில், ‘‘பொதுவாக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை அதிகமாக இருக்கும். அந்த பற்றாக்குறையை மருத்துவக்கல்லூரி நிர்வாகம், பட்டமேற் படிப்பு படிக்கும் முதுநிலை மருத்துவ மாணவர்களை கொண்டு ஈடுகட்டுவார்கள். மருத்துவக்கல்வியும், மருத்துவப்பணியையும் சேர்த்துப்பார்ப்பதால் சரியான தூக்கம் இல்லாமல் சில மாணவர்கள் சோர்வடைந்துவிடுவார்கள். அப்படிதான், உதயராஜ் மனநெருக்கடிக்கு ஆளாகி தற்கொலைமுடிவை எடுத்துள்ளார். இவர் மருத்துவனை விடுதியில் தங்கிப் படிருந்திருந்தால் மற்றவர்களிடம் மனம்விட்டு பேசி இந்த வேலைப்பழு அவருக்கு பழகிப்போய் இருக்கும். ஆனால், இவர் தனியாக வெளியே அறை எடுத்து தங்கி படித்ததாலே தனிமை அவரை தற்கொலை முடிவுக்கு தூண்டியுள்ளது" என்றனர்.

ஏன் மயக்க ஊசி போட்டார்?

அறுவை சிகிச்சை செய்வதற்கு முன் நோயாளிகளுக்கு மயக்கவியல் மருத்துவர்கள், அவர்களுடைய உடல் ஆரோக்கியத்தைப் பரிசோதனை செய்து மயக்க ஊசி போடுவார்கள்.

மயக்க ஊசி போட்டதும் நோயாளிகள் ஆழ்ந்த தூக்க நிலைக்குச் சென்று விடுவார்கள். இதயம் எப்போதும் போல் துடிக்கும். சாதாரண நிலையில் மனிதர்களுக்கு அவர்கள் கட்டுப்பாட்டில் இயற்கை சுவாசம் நடக்கும். ஆனால், மயக்க ஊசி போட்ட நோயாளிகளுக்கு சுவாசம் தானாக நடக்காது. ‘பாயில்ஸ்’ என்ற சுவாசத்தை கண்காணிக்க கருவி மூலம் செயற்கை சுவாசம் நடக்கும்.

மயக்க நிலையில் இந்த செயற்கை சுவாசம் இல்லாதபட்சத்தில் மூச்சுத்தினறி நோயாளிகள் தூக்க நிலையிலே இறந்து விடுவார்கள். அவர்கள் இறப்பது அவர்களுக்குத் தெரியாமலே நடக்கும். அதனால், இறந்த முதுநிலை மாணவர் உதயராஜ் தன்னுடைய தற்கொலைக்கு இந்த மயக்க ஊசி முறையை கையாண்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x